
நுவரெலியா, வலப்பனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்கெட்டிவெல பகுதியில் அயலவருடன் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றியதில், நேற்று (16) திங்கட்கிழமை கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
கல்கெட்டிவெல பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய நபரே உயிரிழந்தவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவருக்கும் அயலவர் ஒருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றியதன் காரணமாக, கோடரியால் தாக்கி இந்தக் கொலை செய்யப்பட்டுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்தக் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை வலப்பனை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.








.jpg)



