
நாட்டின் இருவேறு பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புக்களின் போது சட்ட விரோத மதுபானத்துடன் இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கைகள் பமுனுகம மற்றும் மாரவில பொலிஸ் பிரிவுகளில் ஞாயிற்றுக்கிழமை (15) முன்னெடுக்கப்பட்டுள்ளன.
பமுனுகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நெதுருப்பிட்டிய பகுதியில் பமுனுகம பொலிஸ் நிலைய அதிகாரிகள் மேற்கொண்;ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது 270 லீற்றர் சட்ட விரோத மதுபானம் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் உஸ்வெட்டகெய்யாவ பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய நபர் ஆவார்.
இதேவேளை, மாரவில பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இகலமாவில பகுதியில் வலான மத்திய ஊழல் தடுப்பு பிரிவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது 97 லீற்றர் 500 மில்லிலீற்றர் சட்டவிரோத மதுபானம் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் தும்மோதர பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய நபர ஆவார்.
குறித்த கைது நடவடிக்கைகள் தொடர்பான மேலதிக விசாரணைகளில் பமுனுகம மற்றும் மாரவில பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.










.jpg)

