
மாத்தறை, வல்கம வடக்கு பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நேற்று (16) திங்கட்கிழமை இராணுவ அதிகாரி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
வல்கம வடக்கு பகுதியைச் சேர்ந்த 39 வயதுடையவரே உயிரிழந்தவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவருக்கும் அவரது மூத்த சகோதரருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றியதைத் தொடர்ந்து ஏற்பட்ட மோதலின்போது, மூத்த சகோதரர் கூரிய வாளால் தாக்கி இந்தக் கொலையைச் செய்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரான மூத்த சகோதரர் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாத்தறை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.








.jpg)



