நீர்கொழும்பில் 4,210 போதை மாத்திரைகளுடன் 59 வயது நபர் கைது!



நீர்கொழும்பு, கொச்சிக்கடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தளுவக்கொட்டுவை பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது, 4,210 போதை மாத்திரைகளுடன் சந்தேகநபர் ஒருவர் நேற்று திங்கட்கிழமை (16) கைது செய்யப்பட்டுள்ளார்.

கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலுக்கமைய, மேற்கு மாகாண வடக்கு பிராந்திய குற்றப் தடுப்பு பிரிவினர் அதிகாரிகள் குழுவினரால் இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர் 59 வயதுடைய கொச்சிக்கடை பகுதியைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் மேல் மாகாண வடக்கு பிராந்திய குற்றப் தடுப்பு பிரிவினர் ஈடுபட்டு வருகின்றனர்.