
சட்டவிரோதமான முறையில் பிரமிட் நிதி நிறுவனம் ஒன்றை நடத்தி மோசடியில் ஈடுபட்ட நபர் ஒருவர் நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
வியாழக்கிழமை (05) கைது செய்யப்பட்ட இச்சந்தேகநபர் பாணந்துறை பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய நபராவார்.
சட்டவிரோத பிரமிட் நிதி நிறுவனமொன்றை நிர்வகித்து, தடைசெய்யப்பட்ட பிரமிட் திட்டத்தில் பணத்தை முதலீடு செய்து மோசடியில் ஈடுபட்டமை தொடர்பாகக் கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைவாகவே நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர்.
அதற்கமைய, பண மோசடி தடுப்புச் சட்டம் மற்றும் வங்கிச் சட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், சட்டவிரோத பிரமிட் நிதி நிறுவனத்தை நடத்துதல், பணம் ஈட்டுதல், அதனை ஊக்குவித்தல், விளம்பரம் செய்தல் மற்றும் நிர்வகித்தல் என்பவற்றுடன் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை சீர்குலைத்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும், இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.












