போரதீவுப் பற்று பிரதேச செயலக பிரிவில் காட்டு யானை தாக்கத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசாங்கத்தினால் நஷ்ட ஈட்டு காசோலைகள் வழங்கி வைப்பு
காட்டு யானை தாக்கத்தினால் அதிகம் பாதிக்கப்படுகின்ற மட்டக்களப்பு போரதீவுப் பற்று பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கிராமங்களில் இருந்து பாதிக்கப்பட்டவர்களுக்கான நஷ்ட ஈடு காசோலைகள் வழங்கி வைக்கும் நிகழ்வு பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் எஸ் ரங்கநாதன் தலைமையில் இடம்பெற்றது
அரசாங்கத்தினால் கடந்த ஆண்டு மற்றும் இவ்வாண்டு காட்டு யானை தாக்கத்தினால் ஏற்பட்ட மரணம், காயம், வீடு, சொத்து ,அரச பொது சொத்துச் சேதம் என பாதிக்கப்பட்டவர்களுக்காக 37 மில்லியன் ரூபாவும் விவசாய நடவடிக்கைகளில் பாதிக்கப்பட்டவர்களுக்காக 21 மில்லியன் ரூபா பெறுமதியான காசோலைகள் வழங்கி வைக்கப்பட்டன
முதற்கட்டமாக தெரிவு செய்யப்பட்ட 61 பயனாளிகளுக்கு நஷ்ட ஈட்டு காசோலைகளை கையளிக்கும் நிகழ்விற்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பிரதேச அபிவிருத்திக்குழு தலைவருமான கந்தசாமி பிரபு கலந்துகொண்டு பயனாளிகளிடம் வழங்கி வைத்தார்.
இடம் பெற்ற நிகழ்விற்கு
பிரதேச செயலகத்தின் உதவி பிரதேச செயலாளர் , மற்றும் திட்டமிடல் பணிப்பாளர் எஸ் சுதாகரன் ,பிரதேச சபை உறுப்பினர்கள், பிரதேச செயலக உத்தியோகஸ்த்தர்கள் ,பனாளிகள் என பலர் இவ் நிகழ்வின் போது கலந்து கொண்டிருந்தனர்.















.jpg)


