![]() |
இலங்கையில் முதன்முறையாக 1998ஆம் ஆண்டின் 50ஆம் இலக்க தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைச் சட்டம் மற்றும் தேசிய சிறுவர் பாதுகாப்புக் கொள்கை ஆகியவை பிரெய்லி எழுத்து முறையில் தயாரிக்கப்படவுள்ளன.
மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் தலைமையில் முன்னெடுக்கப்படும் இந்த முயற்சி, பார்வைத்திறன் குறைபாடுள்ள சிறுவர்கள் தமது உரிமைகள் மற்றும் சிறுவர் பாதுகாப்பு தொடர்பான தகவல்களை நேரடியாக அறிந்துகொள்வதற்கு வழிவகுக்கும்.
இதன்மூலம் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் கடமைகள், பொறுப்புகள் மற்றும் தேசிய சிறுவர் பாதுகாப்புக் கொள்கைகள் தொடர்பான தகவல்களைப் பார்வைத்திறன் குறைபாடுள்ள சிறுவர்களும் அறிந்துகொள்ள முடியும்.
அனைத்துச் சிறுவர்களினதும் உரிமைகளைப் பாதுகாப்பதுடன், எவ்விதப் பாகுபாடுமின்றி சிறுவர் பாதுகாப்பு தொடர்பான தகவல்களை அனைவரும் சமமாகப் பெற்றுக்கொள்வதை உறுதிப்படுத்துவதே இதன் பிரதான நோக்கமாகும் என அமைச்சு தெரிவித்துள்ளது.


.jpg)








.jpg)

