முன்னாள் இராணுவ அதிகாரி சுட்டுக்கொ லை – மூன்று சந்தேகநபர்கள் கைது!



ரத்கம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மலியதூவ பிரதேசத்திலுள்ள விளையாட்டு மைதானமொன்றில் வைத்து முன்னாள் இராணுவ அதிகாரி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நவம்பர் 26ஆம் திகதி காலி, ரிச்மண்ட் கந்த பிரதேசத்தைச் சேர்ந்த 47 வயதுடைய முன்னாள் இராணுவ அதிகாரி ஒருவரே இவ்வாறு சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார்.

இதற்கமைய, குறித்த கொலைச் சம்பவத்துடன் தொடர்புடையதாகத் தேடப்பட்டு வந்த சந்தேகநபர்கள் மூவர் நேற்று சனிக்கிழமை (28) காலி குற்றப் புலனாய்வுப் பணியக அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு, ரத்கம பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் கிந்தோட்டை, மாகல்ல மற்றும் காலி ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 31, 38 மற்றும் 41 வயதுடையவர்களாவர்.

மேலும், காலி குற்றப் புலனாய்வுப் பணியகம் மற்றும் ரத்கம பொலிஸார் இணைந்து இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.