ஸ்ரீலங்கன் விமானத்தில் புகை எச்சரிக்கை – அவசர நிலை பிரகடனம்; விசாரணைகள் ஆரம்பம்!



மெல்பர்னில் இருந்து கட்டுநாயக்க நோக்கிப் பயணித்த ஸ்ரீலங்கன் விமான சேவைக்குச் சொந்தமான UL605 விமானத்தின் சரக்கு சேமிப்பு அறையில் (Cargo hold) புகைக் எச்சரிக்கை சிக்னல் (Smoke alarm) தொழிற்பட்டமை தொடர்பில் விசாரணையொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

நேற்று (01) இரவு 11.20 மணிக்கு கொழும்பைச் வந்தடையவிருந்த குறித்த விமானம் தரையிறங்குவதற்கு முன்னர் இந்த எச்சரிக்கை சிக்னல் தொழிற்பட்டமையினால் அவசர நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டதாக ஸ்ரீலங்கன் விமான சேவை தெரிவித்துள்ளது.

இருப்பினும், விமானம் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டுள்ளதுடன், அதில் இருந்த அனைத்துப் பயணிகளும் ஊழியர்களும் எவ்வித பாதிப்புமின்றி வெளியேற்றப்பட்டிருந்தனர்.

இச்சம்பவம் தொடர்பில் ஸ்ரீலங்கன் விமான சேவை அறிக்கையொன்றை வெளியிட்டு, விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மேலதிகமாகத் தெரிவித்துள்ளது.