
அடிப்படை மற்றும் மனித உரிமைகளை மீறி தொழிற்சங்கத் தலைவர் ஆனந்த பாலித்த சிறையில் அடைக்கப்பட்டுள்ள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சாட்டினார்.
பாராளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (17) விசேட கூற்றொன்றை முன்வைத்து குறிப்பிடுகையிலேயே இவ்வாறு குற்றம்சாட்டினார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
நமது நாட்டின் தொழிலாளர் மக்களுக்காகக் குரல் கொடுத்த தொழிற்சங்கத் தலைவரான ஆனந்த பாலித்த கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இது அரசியலமைப்பின் மூலம் நமது நாட்டின் ஜனநாயகத்தை வலுப்படுத்துவதற்காக வழங்கப்பட்டுள்ள ஏற்பாடுகளை மீறும் செயலாகும்
அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையை வன்மையாக கண்டிக்கிறேன். ஆனந்த பாலித்த தொழிலாளரின் உரிமைகளுக்காக எப்போதுமே முன்னின்று செயல்பட்ட ஒருவராவார். அவரது மனித மற்றும் அடிப்படை உரிமைகளை மீறி அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்றார்.








.jpg)



