பாராளுமன்ற நிலையியற் கட்டளை 92(2)இன் கீழ் ஒழுங்குப் பிரச்சினையொன்றை எழுப்பி, எரிவாயு விலை அதிகரிப்பு தொடர்பில் அவசரமாகக் கருத்துத் தெரிவிக்க சஜித் பிரேமதாச முயன்றுள்ளார்.
எனினும், பொருட்களின் விலை அதிகரிப்பு தொடர்பான விடயங்களை ஒழுங்குப் பிரச்சினையாக முன்வைக்க முடியாது எனச் சபாநாயகரும் ஆளுங்கட்சி உறுப்பினர்களும் தெரிவித்துள்ளனர்.
இதன்போது, பொதுமக்களின் பிரச்சினைகள் தொடர்பில் குரல் கொடுப்பது தனது உரிமை எனச் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்.
இதனையடுத்து, நிலையியற் கட்டளை 27(2)இன் கீழ் முன்வைக்கவிருந்த கேள்வியை எழுப்புமாறோ அல்லது ஆசனத்தில் அமருமாறோ சபாநாயகர் பலமுறை அறிவுறுத்தியுள்ளார்.
இருப்பினும், எரிவாயு விலை அதிகரிப்பு தொடர்பில் அரசாங்கம் வெளிப்படைத்தன்மையுடன் செயற்பட்டு மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் எனச் சஜித் தொடர்ந்து வலியுறுத்தியதால், சபையில் நீண்ட நேரம் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.


%20(1).jpg)










