மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயம் தேசியத்தில் சாதனை



தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தால் நடாத்தப்பட்ட தேசிய உற்பத்தித்திறன் போட்டியில் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயம் தேசியமட்டத்தில் மூன்றாம் இடத்தினை பெற்று சாதித்துள்ளது.

 2025/26 இல் தேசிய ரீதியாக தங்க விருது, முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களை பெற்றுக் கொண்ட அரச திணைக்களங்களுக்கான விருதுகள் வழங்கும் நிகழ்வு 2026.11.08 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமையன்று இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசி

ன் அதிமேதகு ஜனாதிபதி கௌரவ அனுரகுமார திஸாநாயக்க அவர்களின் பங்குபற்றுதலுடன் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.


இந்நிகழ்வில், மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயம் தேசிய ரீதியில் மூன்றாம் இடத்தினை பெற்றுக்கொண்டமைக்கான விருதினை வலயக்கல்விப் பணிப்பாளர் திருமதி சிவசங்கரி கங்கேஸ்வரன், பிரதிக்கல்வி பணிப்பாளர்களான திரு. பு.திவிதரன், திருமதி. தே.உதயகரன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். 

இந்தச் சாதனையானது  உத்தியோகத்தர்களின் அர்ப்பணிப்புமிக்க சேவை, அயராத உழைப்பு, சிறந்த குழு ஒத்துழைப்பு மற்றும் வினைத்திறனான அரச சேவை ஆகியவற்றுக்குக் கிடைத்த பெருமைக்குரிய தேசிய அங்கீகாரமாகும்.