2027 வரவு – செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களின் அத்தியாவசிய கொடுப்பனவு அதிகரிக்கப்படும் – ஜனாதிபதி அறிவிப்பு


2027ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் அரச சேவையில் அத்தியாவசிய கொடுப்பனவு அதிகரிக்கப்படுவதுடன், சில கொடுப்பனவுகள் 100 சதவீதத்தால் அதிகரிக்கப்படும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.அரசுச் செய்திகள்

கொழும்பில் இடம்பெற்றுவரும் கூட்டத்தில் கலந்துகொண்டு அரச ஊழியர்களுக்கான கொடுப்பனவுகள் தொடர்பில் கருத்து வெளியிட்ட ஜனாதிபதி, எதிர்வரும் வரவு – செலவுத் திட்டத்தின் ஊடாக இவ்வதிகரிப்புகள் மேற்கொள்ளப்படும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, அரச சேவையில் வழங்கப்படும் அத்தியாவசிய கொடுப்பனவை அதிகரிப்பதுடன், தெரிவு செய்யப்பட்ட சில கொடுப்பனவுகளை தற்போதுள்ள தொகையை விட 100 சதவீதத்தால் அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

2027ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தை ஜனாதிபதியும் நிதி அமைச்சருமான அநுர குமார திசாநாயக்க எதிர்வரும் நவம்பர் 12ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளார்.

இதன்போது ஜனாதிபதி மேலும் கூறுகையில்,

“போட்டிப்பரீட்சை இல்லாமல் அரச சேவைக்கு நியமனங்களை வழங்க முடியாது.

அரச நிறுவனங்களில் நிலவும் வெற்றிடங்களை நிரப்ப வேண்டும் என்பதற்காக தொகை கணக்கில் நியமனங்களை வழங்க முடியாது.

ஏதேனும் பதவிக்கு நியமக்கப்படும் நபர் அந்த துறை தொடர்பில் தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும்.அப்போது தான் அரச துறை வினைத்திறனாக அமையும்.

2027ஆம் ஆண்டு அரச சேவையில் 121,000 பேர் புதிதாக முறையான வழிமுறைக்கு அமைய இணைத்துக் கொள்ளப்படுவார்கள்” என்றார்.

"பெருந்தோட்ட கம்பனிகளுடனான குத்தகை கால ஒப்பந்தத்தை 2042 ஆம் ஆண்டுக்கு பின்னரும் நீட்டிக்கும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் உரிமைகள் மற்றும் சலுகைகளை பாதுகாக்கும் வகையில் புதிய ஒப்பந்தம் தயாரிக்கப்படும்."