ஐஸ், ஹெரோயின் போதைப்பொருட்களுடன் இருவர் கைது – இரு கார்களும் பறிமுதல்!



நவகமுவ பகுதியில் இரண்டு கார்களில் ஒரு கிலோகிராமுக்கும் அதிகமான 'ஐஸ்' போதைப்பொருள் மற்றும் 58 கிராம் ஹெரோயின் ஆகியவற்றைக் கடத்திச் சென்ற இரண்டு சந்தேக நபர்களைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியகத்தின் கண்டி உப பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், நேற்று வெள்ளிக்கிழமை (13) சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நவகமுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெலிகடை சந்தியில் வைத்து குறித்த இரண்டு வாகனங்களையும் பொலிஸார் வழிமறித்து சோதனையை மேற்கொண்ட போதே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.

இதன்போது கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் கடுவலை மற்றும் கொழும்பு 15 ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 20 மற்றும் 32 வயதுடையவர்களாவர்.

சந்தேக நபர்கள் மேலதிக நடவடிக்கைகளுக்காகப் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், இந்தப் போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பு தொடர்பான விரிவான விசாரணைகளைப் பணியக அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றனர்.