ஏறாவூரில் கரையொதுங்கிய 60 அடிதிமிங்கிலம்

(கிருஸ்ணா)

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சவுக்கடி கடற்கரையில திமிங்கிலமொன்று நேற்று வியாழக்கிழமை இரவு கரையொதுங்கியுள்ளது.

இத்திமிங்கிலம் சுமார் 60 அடி நீளமும் 16 அடி அகலமும் கொண்டதாகவுள்ளது.

கரையொதுங்கியுள்ள இத்திமிங்கிலத்தை பார்வையிடுவதற்காக பெருந்திரளான மக்கள் வந்தவண்ணமுள்ளனர்.