வருடாந்தம் வெள்ளத்தால் மூழ்கும் வேத்துச்சேனை மக்களின் சோகக்கதை !


(சக்திவேல் )
மட்டக்களப்பு மாவட்டத்தின் தெற்கே அமைந்துள்ள போரதீவுப்பற்றுப் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மீள் குடியேற்றப்பட்ட கிராமமே வேத்துச்சேனையாகும் இது வெல்லாவெளி கிராமசேவையாளரின் ஒரு கிராமமாகும்.


 இங்கு சுமார் 90 குடும்பங்களில் 500இற்கு மேற்பட்ட மக்கள் செறிந்து வாழ்ந்துவரும் ஒர் விவசாயக் கிராமமாகும். தாழ்நிலப்பகுதில் இக்கிராமம் அமைந்துள்ளதனால் இக்கிராமம் ஆரம்பிக்கப்பட்ட காலம் முதல் இன்று வரைக்கும் மழைகாலத்தில் முற்றாக வெள்ளநீரினால் மூழ்கடிக்கப்பட்டு அந்த கிராம மக்கள் வெல்லாவெளி போன்ற மேட்டு நிலப்பிரதேசங்களுக்கு வள்ளங்கள் தோணிகள் வாயிலாக இடம் பெயர்ந்து வாழ்வது வழக்கமாகிவிட்டது.
இங்குள்ள மக்களின் நிலமையினை நேரில் கண்டறிவதற்காக இவ்வருடம் வெள்ளத்தில் அந்த மக்கள் பாதிக்கப்பட்டபோது நானும் அவர்களைப் பாதுகாப்பாகக் கரையேற்ற உதவியவன் என்றவகையில் வெள்ளம் வற்றியபின் மக்களின் மனோநிலையைக் கண்டறிவதற்காக வேத்துச் சேனைக்கிராமத்துக்கு சென்றேன்.
கிராமத்தினைச் சுற்றிவர வயல் நிலங்களாலும் தென்னைத் தோப்புகளாளும் பசுமையாகக் காட்சியளிக்கும் சிறியதொரு கிராமமான வேத்துச்சேனை வருடவருடம் வெள்ளப்பெருக்கினால் ஏற்படுவது பற்றி வேத்துச்சேனை கிராமஅபிவிருத்திச் சங்கத்தலைவர் திருநாவுக்கரசு என்பவரை அவரது வீட்டில் வைத்து சந்தித்தேன்.
திருநாவுக்கரசு தமது கிராமம் பற்றிக் கூறுகையில் எங்கட கிராமம் ஒர்வளமான ஏரியா விவசாயத்தை நம்பியிருக்கிற மக்கள் ஆனால் வெள்ளகாலத்தில் எங்கட மக்களுக்கு மிகவும் கஸ்ட்டம் அதற்கு மக்கள் போய் இருக்கக்கூடிய இடவசதிகள் இங்கு இல்லை அதற்காக வேண்டி எமக்கு ஒர் பாதுகாhப்பாக தங்கியிருக்கக்கூடிய கட்டிடம் ஒன்று தேவை.
இக்கிராமத்தில் அரச,அரசசார்பற்ற கட்டிடம் ஒன்றும் இல்லை இங்கிருந்து வெள்ளகாலத்தில் மாணவர்கள் வோட்; தோணிகளித்தான் கரையேறுவது பாடசாலைகளுக்கு போவது ஆதலால் போக்குவரத்துக்கு சிரமம் இழுவைத் தண்ணி படகுகளை கொன்டு ஒதுக்கும் குழந்தைகள் கர்பிணித்தாய்மார் போன்றோருக்கு சரியான சிரமம் எனவே எமது கிராமத்தில் உயர்வான பகுதி ஒன்று உள்ளது அதில் பாதுகாப்பான கட்டிடம் ஒன்று அமைத்து தரவேன்டும்.

மேலும் கிராம அபிவிருத்திச் சங்கத்தலைவர் கூறுகையில் நான் அறிந்த வகையில் 1800ம் ஆண்டளவில் இருந்து இந்தக கிராமம் இருந்து வருவதாகவும் அனால் என்னால் கூறமுடியாது என்னகாரணம் எம்மை எமது அதிகாரிகள் பாராமுகமாக இருக்கின்றார்கள் என்று.
ஆனால் வெள்ளகாலத்தின் போது என்றால் பாதைகளும் மிகவும் கிரமாக இருக்கின்றது ஒமுங்கான பாதை வசதிகள் இல்லை பொதுவாக எமது கிராமம் எவ்வித அபிவிருத்திகளும் எட்டப்படவில்லை என ஆதங்கத்துடன் எம்முடன் தமது கருத்தை பகிர்ந்து கொண்டார்.


தொடர்ச்சியாக 64காலவருடமாக வாழ்ந்து வரும் நல்லதம்பி என்பவர் தமது வயல்நிலங்களை பார்வையிட்டுக் கொண்டு இருந்தபோது தான் சற்று அவரை அனுகினேன்
இன்முகத்துடன் ;என்னைப்பார்த்த அவரிடம் தமது கிராமத்தில் வருடாவருடம் எற்படும் வெள்ளம் பற்றி அவரிடம் கதையைத் தொடுத்தோன்.
எங்களுக்கு எதிர்பார்க்கிறது என்பது ஒரு பெரியகட்டிடம் அதில் நாங்கள் வெள்ளம் வரும்போது தங்கியிருப்போம் வேற இதனால் இடம் பெயர்ந்து அயல் கிராமங்களுக்கு போகவேண்டியதில்லை தொடர்ச்சியாக மார்கழிமாத நேரம் வெள்ளம் முற்றாக எமது கிராமத்தை தாக்குpன்றது ஆனாலும் கடந்த வருடம் வந்த வெள்ளம் போல் ஒருபோதும் வரவில்லை நாங்க இவ்வாறு இடம் பெயர்ந்து போகும்போது எமது பொருட்;கள் அனைத்தும் கள்ளர்களால் சூறையாடப்படுகின்றன அத்தோடு எமது தொழில்கள் பாதிக்கப்படுகின்றது.

வெள்ளத்தினால் அள்ளுண்டு போன வேத்துச்சேனை பிரதான வீதி வளியே நான் சென்று கொண்டிருந்த ஜெயா என்ற பெண்ணை சந்தித்தேன் அவர் தமதுகிராமம் வருடாவருடம் ஏற்படும் வெள்ளப்பெருக்கு பற்றிக் கூறுகையில்.
நான் 27வருடகாலமாக வேத்துச்சேனைக்கிராமத்தில் இருந்து வருகின்றேன். நாங்கள் இடம் பெயர்ந்து மண்டூர்,வெல்லாவெளி, போன்ற பகுதிகளில் வாழ்ந்தோம் தற்போது எமது கிராமத்திலேயே இருக்கிறோம் எங்களுக்குத் தேவை ஒருபாடசாலை மற்றது வெள்ளம் வந்தால் கரைப்பகுதிக்கு போவதற்கு வீதி இல்லை எப்படியாவது ஒருகட்டிடம் ஒன்று தேவை அப்படி இருந்தால் எங்கட பொருட்களைப் பார்த்துக் கொண்டு எமது கிராமத்திலேயே இருக்கலாம் என்ற ஆதங்கம்.

எங்களுக்கு அந்தகாலப் பகுதியில்(மழை காலத்தில்) எமது சொத்துப்பத்துக்கள் அறியாத அளவுக்கு இன்னொருவர் இதுவரைக்கும் சூரையாட முடியாத அளவிற்;கு நாங்கள் இருக்க வேனும் என்றதுதான் எங்கட விருப்பம். எங்கட கிராமத்துக்கு வெள்ளம் வந்தால் நாங்கள் மாலைதீவில் இருக்கிற மாதிரித்தான் எங்கையும் போகேலாது எதுவுமே செய்ய இயலாது காலையில் எழும்பி எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாகத்தான் காட்சியளிக்கும். அந்த வெள்ளம் எப்படி வந்திச்சி எப்படி ஏறிக்கி எண்றே தெரியாது அப்படி அடித்துவரும் தண்ணீர் அடித்து இழுத்துப் போனால் குடும்பத்தோடு கொண்டு போயிருந்தால் நிம்மதியாப்போயிருக்கலாம் என எண்ணிவிட்டு இருந்திருக்கலாம்.

அதற்காக வேண்டி எங்கட உயர் அதிகாரிகள் எங்கட கருத்தை சிரமேற்கொண்டு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் இதனால் கடநத வருடம் இரண்டு பேருக்கு பாம்பும் கடித்தது கர்பணித்தாய்மாரும் வயோதிபரும் குழந்தைகளும் என பலரும் மிகவும் கஸ்ரப்பட்டோம். இதனை மிகவிரைவில் நிவர்த்தி செய்து தரவேண்டும் என்ற மனமுடைந்த நிலையில் எம்மிடம் தனது கருத்துக்களைப பகிர்ந்து கொண்டார்.


அடுத்து ஜெயா என்பவரை சந்தித்துக் கொண்ட பின்னர் தனது வீட்டில் அரிசிபுடைத்துக் கொண்டிருந்த 60வயதையுடைய நேசம்மா என்ற மூதாட்டியை சற்று அனுகினேன்
தமது கிராமத்தில் ஏற்படும் வெள்ளப் பெருக்குப் பற்றி சற்று கதையை கொடுத்தேன் அவர் எம்மிடம் கூறும்போது
 நான் பிறந்தகாலத்தில் இருந்து வெள்ளம் வருகின்றது எங்களுக்கு பாதுகாப்பு வசதிகள் கிடையாது எனக்கு வயது போயிற்று இதுவரைக்கும் வெள்ளகாலத்தில் கஸ்ரப்பட்டுக் கொண்டுதான். இருக்கிறம் இனிவரும் சந்ததிகளாவது கஸ்ரப்படாமல் இருக்க யாரும் உதவுவார்களா.
எங்களுக்கு மழை பெய்தால் பயம் ஏன்னெனில் எங்கட பிள்ளைகளை எப்படி கரையேற்றுவது நாங்கள் எங்க போவது எங்களை கரையேற்றுவதற்கு தோணிகள் எப்பவரும் என்ற கவலையுடன்தான் இருப்பம்.
இது ஒருபுறம் இருக்க வருடா வருடம் எங்கட தொழில்கள் எல்லாம் அழிஞ்சி கொண்டு வருகுது நாங்கள் கோடைகாலத்தில் கொஞ்சம் முயற்சி எடுக்கின்றோம் மாரிகாலத்தில் வெள்ளத்தினால் அழிவடைந்து போகின்றது. எங்கட முன்னேற்றம் தடையாக அமைகின்றது இதனால் அந்தக் காலப்பகுதியில் மாணவர்களின் கல்வி நடவடிக்கை முற்றாக தடைப்படுகின்றது. எங்கட காலம்தான்; படிப்பில கோட்டை விட்டுவிட்டோம். எங்கட பிள்ளைகளின் காலத்திலாவது முன்னேற்ற மடையத்தான் வேண்டும். கடந்த வருடம் தோணிவந்தது எங்களுக்கு தோணியில் செல்ல பயம் பிறகு அதிகாரிங்க வோட்கொண்டுவந்து பறிச்சாங்க பிறகு நாங்க வெல்லாவெளியில் தங்கியிருந்தோம் அங்கு எல்லாம் தந்தாங்க அது அப்படி இருப்பினும் எங்கட வேளான்மை எல்லாம் அழிந்துவிட்டது எங்கட பாதுகாப்புக்காக வேண்டி ஏதாவது வசதி அமைத்து கட்டாயம் தரவேண்டும். என கண்ணீர் மல்கக்கூறினர் நேசம்மா...
வேத்துச்சேனைக் கிராமமக்கள் வேளாண்மைச் செய்கையைப் பிரதான தொழிலாகக் கொண்டாலும் உபதொழிலாக செங்கல் உற்பத்தியிலும்; ஈடுபட்டு வருகின்றார்கள் இவ்வாறு தொழில ;செய்துவரும் அம்பலவாணன் தனதுமன ஆதங்கத்தை இவ்வாறு வெளிப்படத்துகின்றார்.
நான் இந்தகிராமம்; ஆரம்பிக்கப்பட்டகாலம் முதல் வாழ்ந்து இருந்து வருகின்றேன் ஆனால்1957ம் ஆண்டில் இருந்து இன்றுவரை வருடா வருடம் மார்கழி மாதத்தில் தொடர்ச்சியாக வெள்ளப் பெருக்கு வந்த வண்ணமே உள்ளது. அதனால் எமது வேனாண்மை கல்வாடித் தொழில்கள் அனைத்தும் வெள்ளத்தினால் அடித்துச்செல்லப்படுகின்றது.
இதற்கு எங்கட கிராமத்தைச் சுற்றி பெரியதொருகட்டுப் போட்டுத்தந்தால் மிகவும் நல்லதாக அமையும் எனக்கூறினார்.
இடர்கள் வரும்போது உரிய வேளையில் தகுந்த உதவிகளை நல்கவேண்டியது சம்பந்தப்பட்டவர்களின் கடமையாகும் ஆனாலும் வேத்துச்சேனைக் கிராமம் வருடாவருடம் வெள்ளத்தினால் பாதிக்கப்படுவதனால் அவர்களுக்கு உரிய அனர்த்தத்திற்கு தாக்குப் பிடிக்கக்கூடிய பாதுகாப்பு வசதிகளை முன்கூட்டியே ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டுமல்லவா?....
கடந்த வருடமும் இவ்வருட ஆரம்பத்திலும் இந்தக்கிராமம் கூமார் இரண்டு வாரங்களுக்கு முற்றாக நீரில் தாழ்ந்து போயிருந்தது அது போல் இவ்வருடமும் வரும் என்ற எதிர் பார்ப்புடன் அந்தக்கிராமத்து மக்கள் வாழ்நது கொட்டிருக்கின்றனர்
ஆனாலும் தொடர்ச்சியாக வெள்ளப்பெருக்கிற்குள் உட்பட்டுவரும் வெல்லாவெளி வேத்துச்சேனை கிராமத்துமக்கள் அதிலிருந்து முழுமையாக மீள்வதற்கு நிலையான தீர்வினையே வேண்டிநிற்கின்றனர்.....
சக்தி