மட்டக்களப்பு, உன்னிச்சைக் குளத்தின் அணைக்கட்டு பாலத்திற்குக் கீழிருந்து பெருந்தொகையான ஆயுதங்களை பொலிஸ் மற்றும் விஷேட அதிரடி படையினர் இணைந்து இன்று செவ்வாய்க்கிழமை மீட்டுள்ளனர்.விமானத்தை சுடும் துப்பாக்கி 1, ரீ - 56 ரக துப்பாக்கிகள் 9, ரீ – 81 ரக மெகஸின்கள் 29, ரீ – 56 ரக மெகஸின்கள் 2, எம் - 16 ரக மெகஸின்கள் 6, 9 – எம்.எம் ரக மகஸின் 1, மோட்டார் பியுஸ் 2, லிங்க் 21 உட்பட 18 வகையான ஆயுத உதிரிப்பாகங்கள் மீட்கப்பட்டுள்ளன.
மீன் பிடிக்க சென்ற இளைஞர் ஒருவர் பாலத்திற்குக் கீழே உர பைகளில் ஆயுதங்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை கண்டு ஆயித்தியமலை பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் பேரிலேயே மேற்படி ஆயுதங்கள் மீட்டெடுக்கப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜெகத் அபேசிரி குணவர்தனவின் உத்தரவின் பேரில் ஆயித்தியமலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.எம்.எஸ்.பண்டார மற்றும் வவுணதீவு விஷேட அதிரடிப்படையின் இரண்டாவது கட்டளை அதிகாரி எஸ்.எம். பிரேமச்சந்திர, மற்றும் விஷேட அதிரடி படையின் குண்டு செயலிழப்பு பிரிவு பொறுப்பதிகாரி எஸ்.எஸ். பொதேஜு ஆகியோர் தலைமையிலான ஆயுத மீட்பு அணியினர் இந்த ஆயுதங்களை உன்னிச்சைக் குளத்தின் அடியிலிருந்து மீட்டெடுத்துள்ளனர்.









.jpg)



.jpeg)
.jpeg)