அமைச்சரும் இணைப்பாளர்களும் அரச வேலை பெற்றுத்தருவதாக கூறி பல கோடி ரூபா மோசடி


கிழக்கு மாகாண விவசாய அமைச்சரும் அவரது இணைப்பாளர்களும் அரச வேலை பெற்றுத்தருவதாக பல இளைஞர் யுவதிகளிடம் பல கோடி ரூபா மோசடி


கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் துரையப்பா நவரட்ணராஜா அரசவேலை பெற்றுத்தருவதாக அவரின் இணைப்பாளர் அஸிஸ் என்பவரிடம் 37 இலட்சம் ரூபா காசோலை மோசடி தொடர்பாக நீதிமன்றத்தின் பிடிவிறாந்து கட்டளையையடுத்து நீதிமன்றத்pல் செவ்வாய்க்கிழமை ஆயரான போது இரண்டு ஆள் சரிரிரப் பிணையும் 2 இலட்சம் ரூபா பிணையிலும் அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா பிணையில் விடுவித்துள்ளார்

விவசாய அமைச்சரின் முன்னால் இணைப்பாளராக இருந்த அஸிஸ் பல இளைஞர்களிடம் அரசாங்க நிறுவனங்களில் வேலைபெற்றுத்தருவதறாக் 37 இலட்ச்சம் ரூபா பணத்தை பெற்று அமைச்சரிடம் வழங்கியுள்ளதாகவும் அமைச்சர் வேலையைப் பெற்றுத்தரமல் இழுத்தடித்து ஏமாற்றி வந்துள்ளார்
இதனையடுத்து பணத்தை திருப்பித்தருமாறு இணைப்பாளர் கேட்டதையடுத்து 37 இலட்ச்சம் ரூபா பணத்திற்காக காசோலகளை வழங்கியுள்ளார் ஆனால் அக்காசோலைகளுக்கான பணம் வங்கியில் இல்லாமல் காசோலைகள் வங்கியில் இருந்து திரும்பியது இதற்கான பணத்தையும் கொடுக்காமல் அமைச்சர் ஏமாற்றி வந்ததையடுத்து இணைப்பாளர் அஸிஸ் அமைச்சருக்கு ஏதிராக அக்கரைப்பற்று பொலிசாரிடம் முறைப்பாடு செய்து நீதிமன்றத்தில் வழக்கு தாக்குதல் தொடுக்கப்பட்டது
இவ் வழக்கிற்கு அமைச்சர் நீதிமன்றத்தில் ஆயராகாமல் இருந்து வந்ததையடுத்து நீதிமன்றம் அமைச்சருக்கு பிடிவிறாந்து பிறப்பித்த நிலையில் செவ்வாய்க்கிழமை 29 திகதி அமைச்சர் அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றத்pல் நீதிபதி h.p;சரவணராஜா முன்னிலையில் சட்டத்தரணிசகிதம் ஆயரானதையடுத்து அமைச்சருக்கு இரண்டு ஆள் சரிரிரப் பிணையும் 2 இலட்சம் ரூபா காசுப் பிணையிலும் விடுவித்துள்ளார்
இதேவேளை அமைச்சரின் இணைப்பாளர்கள் என பாண்டிருப்பு பிரதேசத்தைச் சேர்ந்த விநாயமூர்த்தி, அக்கரைப்பற்று பள்ளிக்குடியிருப்பு லாபீர் , அக்கரைப்பற்று 3ம் கட்டை றினோஸ் என்பவர்கள் அமைச்சர் வேலை பெற்றுதருவதாக மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட பல தமிழ் இளைஞர் யுவதிகளிடம் தலா 3 இலட்சம் ரூபா பணத்தை பெற்று நியமனக்கடிதங்களை வழங்கி பணத்தை பெற்றுள்ள நிலையில் அவ் நியமனக் கடிதங்களுடன் சம்மந்தப்பட்ட அரசநிறுவனங்களில் வேலைக்கு சென்று வேiயை கடமையை ஏற்று ஒன்று அல்லது இரண்டு மாதங்களின் பின் இவ் நியமனக்கடிதங்கள் போலி நியமனக் கடிதங்கள் என அரசாங்க தலைமைக்காரியலயத்தில் இருந்து அறிவுறுத்தலின் பின்னர் அவர்களை வேலையில் இருந்து வெளியேற்றப்பட்டள்ளனர்
இந் நிலையில் வேலையும் இல்லாமல் பணத்தையும் பறிகொடுத்து பொலிசாரிடமும் செல்லமுடியாமல் பல இளைஞர் யுவதிள் ஏமாற்றம் அடைந்து வீதியில் பித்துப்பிடித்து அலைகின்றனர் கடந்த ஏப்பிரல் மாதம் விநாயகமூர்த்தி என்பவரால் களுவாஞ்சிக்குடி போரதீவு பிரதேசத்தை சேர்ந்த இருவரிடம் வைத்தியசாலையில் சிற்றூலியர் வேலை பெற்றுத்தருவதாகவும் நியமனக்கடிதம் கையில் தந்தவுடன் தலா இரண்டு இலட்சத்து 50 ஆயிரம் ரூபா வீதம் பணம் தருமாறு எற்படுத்தப்பட்ட ஒப்ந்தத்தையடுத்து இருவரையும் கொழும்பில் சுகாதார அமைச்சு காரியாலயத்திற்கு அழைத்துச் சென்று நேர்முகப்பரீட்சை நடாத்தி அவர்களுக்கான நியமக் கடிதத்தை அமைச்சின் காரியாலய பியோன் மூலம் வழங்கப்பட்டது
இவ் நியமனக்கடிதத்தில் அம்பாறை போதனா வைத்தியசாலையில் ஏப்பிரல் 19 ம் திகதி வேலைக்கு சென்று கடமையை ஏற்குமாறு நியமனக்கடிதம் வழங்கப்பட்டதையடுத்து மதலில் செய்யப்பட ஒப்பந்தத்தையடுத்து அமைச்சருக்கு பணத்தை கொடுக்க வேண்டும்என அவர்களை நிப்பந்தித்ததையடுத்து ஒருவர் இரண்டு இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பணத்தை வழங்கியுள்ள நிலையில் மற்றவர் இவ் நியமனக்கடிதம் போலியானதா உண்மையானதா என பரிசோதிப்பதற்காக இருவரும் ஏப்பிரல் 5ம் திகதி அம்பாறை போதனா வைத்தியசாலைக்குச் சென்று வைத்தியசாலையின் பணிப்பாளரிடம் கடிதத்தை வழங்கிய நிலையில் பணிப்பாளர் இது போலி நியமனக்கடிதம் என கண்டுபிடித்துவிட்டு இருவரையும் பொலிசாரை வரவளைத்து ஒப்படைக்கப்பட்டனர் இருவருக்கும் எதிராக பொலிசார் வழக்கு தாக்குதல் செய்யப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட நிலையில் இருவரையும் நீதிபதி விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்
அதேவேளை அமைச்சரின் இணைப்பாளர் லாபீர் அக்கரைப்பற்று கோளாவில் இளைஞர் ஒருவரிடம் பணத்தை பெற்று திருகோணமலையில் உள்ள தொழில் நுட்பக்கல்லூரியில் சிற்றூழியர் நியமனக்கடிதம் கொடுக்கப்பட்டு அவரும் அங்கு சென்று சிறிது காலம் வேலை செய்தபின்னர் போலி நியமனக்கடிதம் எனக்கண்டுபிக்கப்பட்டு 10 மாதங்கள் சம்பளம் இன்றி வேலைசெய்த பின்னர் அவரை தொழில் நுட்பக்கல்லூரியில் இருந்த வெளியேற்றியதையடுத்து அவர் அக்கரைப்பற்று பொலிசாரிடம் முறைப்பாட்டையடுத்து லாபீரை பொலிசர் கைது செய்தபோது அவர் தான் கருணா, பிள்ளையான், பசில்ராஜபஷ;ச, விவசாய அமைச்சர் ஆகியோரின் இணைப்பாளர் என போலியாக தெரிவிக்கப்பட்ட நிலையில் அருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தாக்குதல் செய்யப்பட்டுள்து
இவ்வாறு விவசாய அமைச்சர் தனது இணைப்பாளர்கள் ஊடாக பல கோடி ரூபாக்களை தமிழ் முஸ்லிம் இளைஞர் யுவதிகளிடம் ஏமாற்றி மோசடி செய்துவருகின்றனர் எனவே தமிழ் முஸ்லிம் இளைஞர்களே இந்த நபர்களிடம் வேலைக்காக பணத்தை கொடுத்து ஏமாற்ற ம் அடையவேண்டாம்
-