கோட்டைக்கல்லாறை சேர்ந்தவர் பம்பலப்பிட்டியில்சடலமாக மீட்பு

(கிருஸ்ணா)

மட்டக்களப்பு,களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோட்டைக்கல்லாறை சேர்ந்தவர் பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரிக்கு முன்பாகவுள்ள வீதியோரத்திலிருந்து கத்திக்குத்து காயங்களுடன் சடலமாக நேற்று வியாழக்கிழமை இரவு  மீட்கப்பட்டுள்ளது.

கோட்டைக்கல்லாறு கிழக்கை சேர்ந்த கணபதிப்பிள்ளை உதயகாந்தன் (வயது 37) என்பவரது சடலமே மீட்கப்பட்டுள்ளது.

இனந்தெரியாத நபர்கள் இவரைக் கத்தியால் குத்திக் கொலை செய்த நிலையில் சடலத்தை அவ்விடத்தில் விட்டுச் சென்றிருக்கலமென பொலிஸார் தெரிவித்தனர்.

வெள்ளவத்தையிலுள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிலையத்தில் இவர் பணிபுரிந்து வந்ததாக விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

இவரது மனைவி மற்றும் ஒரு மகன் இலண்டனில் வசித்துவரும் நிலையில் இவர் இங்கு வெளிநாட்டு முகவர் தொழில்புரிந்துவந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.