(கிருஸ்ணா)
மட்டக்களப்பு பட்டிப்பளை பிரதேச செயலகத்துக்குட்பட்ட முனைக்காடு எழுதளிர் கல்வியகத்தின் தளிர் சஞ்சிகை வெளியீட்டுவிழா நேற்று இடம்பெற்றது.
எழுதளிர் கல்வியகத்தின் ஆலோசகர் மு.நமசிவாயம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
இந்நிகழ்வில் சிறப்பு அதிதியாக முன்னாள் மாகாணசபை உறுப்பினர் பூ.பிரசாந்தன்,மாவட்ட கலாசார உத்தியோகத்தர் மலர்ச்செல்வன்,பட்டிப்பளை கோட்டக்கல்வி பணிப்பாளர் ந.தயாசீலன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது நூல் வெளியீட்டு உரையினை இ.குகநாதன் நிகழ்த்தியதுடன் பிரதம அதிதியால் நூல் வெளியீடு செய்துவைக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து நூல் நயவுரையினை வன்னியசிங்கம் நிகழ்த்தியதுடன் அதிதிகள் உரையும் இடம்பெற்றது.
படுவான்கரை பிரதேசத்தின் கலை கலாசாரங்களை தாங்கியதாகவும் அறிவுசார்ந்த விடயங்களைக்கொண்டதாகவும் தளிர் சஞ்சிகை வெளிவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

.jpg)

.jpg)