லண்டன் பயிற்சியாளரினால்மட்டு.பின்தங்கிய மாணவர்களுக்கு மெய்வல்லுனர் பயிற்சி

(மா.சசி)

மட்டக்களப்பு வலய கல்வித்திணைக்களத்தின் ஏற்பாட்டில் லண்டன் கல்தோர்ப் பார்க் பாடசாலையின் வழிகாட்டலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பின்தங்கிய பிரதேசங்களைச் சேர்ந்த பாடசாலை சிறார்களுக்கு மெய்வல்லுனர் பயிற்சிகள் மேற்கொள்ளும் கிட்ஸ் ஆத்லெட்டிக் திட்டம் கடந்த மூன்று தினங்களாக இடம்பெற்று நேற்று நிறைவடைந்தது.

மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் புளியடிமுனை தமிழ் கலவன் பாடசாலை மைதானத்தில் இடம் பெற்ற இப்பயிற்சி முகாமில் மட்டக்களப்பு வலய கல்வி பிரதேசத்திற்குட்பட்ட 9 பின்தங்கிய பாடசாலைகளைச்சேர்ந்த 90 மாணவர்கள் பங்குகொண்டனர்.

லண்டன் கல்தோர்ப் பார்க் பாடசாலையின் உடற்கல்வி போதனாசிரியர் டொம்மி டய்லர் இம்மாணவர்களுக்கான மெய்வல்லுனர் பயிற்சிகளை வழங்கினார்.மட்டக்களப்பு கல்வி வலய உடற்கல்வி உதவிக் கல்விப் பணிப்பாளர் கே.லவக்குமார் இந்நிகழ்வில் பிரதம அதிதயாக கலந்து கொண்டார்.

மாணவர்களின் உடற்பயிற்சிக்கண்காட்சி உட்பட பல நிகழ்வுகள் இடம்பெற்றன.