மட்டக்களப்பு பாஞ்சாலிபுரம் அருள்மிகு ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலய வருடாந்த உற்சவம்

( ரவிப்ரியா )
வரலாற்றுச் சிறப்பு மிக்கதும், பழமைவாய்ததும், பிரசித்தமானதும், ஈழமணித் திருநாட்டில் எழில் வளம் மிக்கதும், நீரர மகளிர் தேனிசை பொழியும், மோனத் தவமுனி வித்தக விபுலானந்தன் எனும் விடிவெள்ளி நிறை செல்வமாக அவதரித்த மதிப்புமிகு மண்ணாம் மட்டுநகரில், புளியந்தீவு, கல்லடித்தெரு, பாஞ்சாலிபுரத்தில,; தனித்துவம் மிக்க தனி வழித்தாய் ஆலயமாக நீரோட்ட வாவி சூழ வீற்றிருந்து அருள் பாலித்து, வருகின்ற அருள்மிகு ஸ்ரீ
திரௌபதை அம்பாளின் வருடாந்த உற்சவம் இம் மாதம் 8ந் திகதி செவ்வாய்க் கிழமை காலை 10.00 – 11.30 வேளையில் திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமாகின்றது. அன்றைய தினம் பஞ்சபாண்டவர் கொலுவும்; பிற்பகல் 4.00 மணிக்கு மட்டக்களப்பு அருள்மிகு ஸ்ரீ வீரகத்திப் பிள்ளையார் ஆலயத்திலிருந்து பாற்குட பவனியும், பூரண கும்பமும் பூசைப்பெட்டிகளும் ஊர்வலமாக ஆலயத்தை வந்தடையும்.

இதனைத் தொடர்ந்து 13ந் திகதிவரை திருச்சடங்கு தினமும் நடைபெற்று 14ந் திகதி கல்யாணக்கால் சடங்கும், 15ந் திகதி வனவாசச் சடங்கும்,16ந் திகதி கும்பச் சடங்கும், 17ந் திகதி தவநிலைச் சடங்கும்,18ந் திகதி பூ மிதிப்பு என்னும் தீ மிதிப்பும் இடம் பெறும். 19ந் திகதி கும்பம் சொரிதலும் தீப்பள்ளயமும், 19ந் திகதி வைரவர் சடங்கும் இடம் பெறும்.

கிரியைகள் பிரதம பூசகர் சிவத்திரு மு.சூரியகுமார் தலைமையில் உதவிப் பூசகர்களான அலங்காரத் திலகம் ஸ்ரீ கதிரவநாதசர்மா மற்றும் நா.கிN~hக்குமார் ஆகியோர் இணைந்து மேற்கொள்வர்.