சட்டவிரோதமாக மின்சாரம் பெற்ற 30 பேருக்கு அபராதம்

அம்பாறை, அக்கரைப்பற்றுக்குட்பட்ட  பகுதிகளில் சட்டவிரோதமாக மின்சாரம் பெற்ற 30 பேருக்கு அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற நீதவான் தலா 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

அக்கரைப்பற்று பொலிஸாரும் இலங்கை மின்சார சபையினரும் இணைந்து கடந்த ஓகஸ்ட் மாதம் 3 ஆம் திகதி மேற்கொண்ட திடீர் சுற்றவளைப்பின் போது அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, பாலமுனை, ஒலுவில் ஆகிய பிரதேசதங்களைச் சேர்ந்த 30 பேரும் சட்டவிரோதமாக மின்சாரம் பெற்ற நிலையில் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றினால் சரிரப்பிணையில் விடுதலை செய்யப்பட்டனர்.

இந்நிலையில், இவ்வழக்கு அக்கரைப்பற்று நீதிமன்ற நீதிபதியும், மேலதிக நீதவானுமாகிய ஏ.எச்.எம். பசீல் முன்னிலையில் திங்கட்கிழமை (1) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது ஒவ்வொருவருக்கும் தலா 10 ஆயிரம் அபராதம் விதித்து நீதவான் தீர்ப்பளித்தார்.

இதேவேளை, சட்டவிரோதமான மின்சாரம் பெற்றக் காரணத்தினால் இலங்கை மின்சார சபைக்கு ஏற்பட்ட நஷ்டஈட்டினையும் செலுத்துமாறு நீதவான் மேற்படி நபர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.