இடப்பகிர்வு சுற்றுலா

(சுந்தர்)

மட்டக்களப்பு மாவட்டம் கோறளைப்பற்று தெற்கு பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட சிறுவர்களின் அபிவிருத்தி மற்றும் பாதுகாப்பு என்பவற்றை மேம்படுத்தும் வகையில் கோறளைப்பற்று தெற்கு பிரதேசசெயலாளர் கோ. தனபாலசுந்தரம் அவர்களின் வழிகாட்டலில் பல்வேறுதிட்டங்கள் அண்மைகாலமாக பிரதேசத்தில் இடம் பெற்றுவருகின்றன.

அந்தவகையில் கடந்தகாலங்களில் அதிகளவான சிறுவர் பிரச்சினைகள் பதிவாகியுள்ள வாகனேரி கிராமசேவகர் பிரிவைச் சேர்ந்த சிறுவர்களை சுகாதாரம், கல்வி, விளையாட்டு, மற்றும் சிறந்த தலைமைத்துவம் கொண்டவர்களாக மாற்றும் பொருட்டு நவீன சிறுவர் கிராமமாக அபிவிருத்தி செய்யும் நோக்கில் பிரதேச செயலக சிறுவர் மற்றும் பெண்கள் அபிவிருத்தி பிரிவால்  பல்வேறு நிகழ்சிகள் நடாத்தப்பட்டுவருகின்றன.


அதில் ஓர் அங்கமாக வாகனேரி கிராம மட்டசிறுவர் உரிமை கண்காணிப்பு குழு உறுப்பினர்களுக்கான இடப்பகிர்வுசுற்றுலா ஒன்று பிரதேசசெயலகத்தின் சிறுவர் உரிமைமேம்பாட்டு உதவியாளர் எம்.கே.றுசைட் அவர்களின் தலைமையில் வியாழக்கிழமை (30) வாகரை வடக்கு கிராமசேவகர் பிரிவில் மேற்கொள்ளப்பட்டது.

இதன் போது இரு கிராமமட்டசிறுவர் உரிமை கண்காணிப்புகுழுக்களும் தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டதுடன் தமது குழுக்கள் எதிர்நோக்குகின்ற சவால்கள் மற்றும் தேவைகள் பற்றி கலந்துரையாடினர்.

இந்நிகழ்வின்போது இரு கிராமமட்ட குழுக்களையும் சார்ந்த 30 பேர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வு தேசியநன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு திணைக்களத்தினதும், வேர்ல்ட் விஷன் அமை;பின் கிரான்அபிவிருத்திம் திட்டத்தினதும்  அனுசரணையுடன் இடம்பெற்றது.