FUTURE MINDS KINDERGARTAN & CHILD CAREசிறுவர் நலன்காப்பு நிலையத்தின் இறுதியாண்டுப் பரிசளிப்பு நிகழ்வு


(சிவம்)

FUTURE MINDS KINDERGARTAN & CHILD CARE நிலையத்தின் முதலாம் நிலையில் நீச்சல் பயிற்சியை நிறைவு செய்த சிறுவர்களுக்கான சான்றிதழ்கள் மற்றும் ஆண்டு இறுதிப் பரிசளிப்பு நிகழ்வு சின்ன உப்போடை ஈஸ்ட் லகூண் ஹோட்டலில் நடைபெற்றது.

விளையாட்டுடன் கூடிய கல்வியை ஊட்டும் சிறுவர் நலன்காப்பு நிலையமான தாண்டவன்வெளி  பாரமரிக்கப்படும் சிறுவர்களில் 3 மாத கால நீச்சல் பயிற்சியை நிறைவு செய்த 10 சிறுவர்களுக்கு சான்றிதழ்களும் பரிசுப் பொருட்களும்  வழங்கப்பட்டன.

முகாமைத்துவப் பணிப்பாளர் வி. மனோகரன் நிலையத்தினால் சிறுவர்களுக்கு வழங்கப்படும் பயிற்சிகள் மற்றும் பயிற்சியினால் சிறார்கள் அடையும் திறன்கள் பற்றி பல் ஊடக திரையில் விளக்கமளித்தார்.

மட்டக்களப்பு போதனை வைத்தியசாலையின் உளநலப்பிரிவன் வைத்தியக் கலாநிதி ரி.கடம்பநாதன், சிறுவர்நலன் வைத்திக் கலாநிதி சித்திரா கடம்பநாதன் ஆகியோர் உடபட பலர் கலந்து கொண்டனா.

இலங்கை நீரியல் நீச்சல் பயிற்சி நிலையத்தினால் சிறுவர்களுக்காக நடாத்தப்படும் பயிற்சி 3 நிலைகளைக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.