மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தினால் முன்பள்ளி மாணவர்களுக்கான கலை விழா

 சிறுவர் அபிவிருத்தி மற்றும் பெண்கள் விவகார அமைச்சின் சிறுவர் செயலகத்தின் ஊடாக மாவட்ட செயலகத்தால் 28.11.2014 அன்று  தன்னாமுனை மியானி நகர் மண்டபத்தில் அரசாங்க அதிபர் திருமதி.P.S.M. சார்ள்ஸ் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதேச செயலாளர்கள், உள்ளுராட்சி உதவி ஆணையாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர், மாவட்ட முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி இணைப்பாளர், பிரதேசமட்ட முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

இந்நிகழ்வில் சுமார் 150 முன்பள்ளி மாணவர்கள் பங்குபற்றியதோடு அவர்களது கலைப்படைப்புக்களும் மேடையில் அளிக்கை செய்யப்பட்டன. அதனைத் தொடர்ந்து சிறுவர் இலக்கியத்திற்காக அர்ப்பணித்த மாஸ்டர் சிவலிங்கம் அவர்களை பாராட்டி பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டதோடு அவரின்  கதை திறன் மூலம் மாணவர்களை மகிழ்வித்தார்.  மட்டக்களப்பு அரசாங்க அதிபரும் இந் நிகழ்வில் கௌரவிக்கப்பட்டார்

இந்நிகழ்வில் பங்குபற்றிய அனைத்து மாணவர்களுக்கும் சிறுவர் செயலகம் மற்றும் பிளான் ஸ்ரீலங்கா அனுசரணையின் கீழ் அரசாங்க அதிபரினால் புத்தகப் பை (school bag) மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன.