மட்டக்களப்பு கச்சேரியின் புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் அமைச்சர் வஜிர அபேவர்தவினால் நாட்டி வைப்பு

(எம்.எஸ்.எம்.நூர்தீன், ஆர்.சயனொளிபவன் )

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் இன்று (11.9.2016) ஞாயிற்றுக்கிழமை பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தவினால் நாட்டி வைக்கப்பட்டது.;.


மட்டக்களப்பு திராய்மடுப்பிரதேசத்தில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில் நடைபெற்ற இந்த வைபவத்தில் கிழக்கு மாகாண முதலமைச்சர்; செயினுலாப்தீன் ஹாபீஸ் நசிர் அகமட், மற்றும் பிரதியமைச்சர்களான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி மற்றும் பைசால் காசீம் கிழக்கு மாகாண ஆளுனர் ஒஸ்ரின் பெர்ணான்டோ மற்று மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன், அலி சாஹீர் மௌலானா, கிழக்கு மாகாண அமைச்சர் திருமதி ஆரியவதி கலபதி,   ப்ளூ ஓசியன் குரூப் ஒப் கம்பனி தலைவர் துமிலன் சிவராஜா ,  மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் உட்பட அதிகாரிகள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் பிரதேச செயலாளர்கள் திணைக்கள தலைவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.


இந்தக்கட்டிடம் மட்டக்கள்பபு திராய்மடுப்பிரதேசத்தில் 804 மில்லியன் ரூபா செலவில் நிர்மானிக்கப்படவுள்ளது.

புதிதாக நிர்மானிக்கப்படவுள்ள இந்த மாவட்ட செயலக கட்டிடம் நவீன முறையில் நிர்மானிக்கப்படவுள்ளது 800 பேர் அமர்த்திருக்க கூடிய கூட்ட மண்டபமும் நிர்மானிக்கப்படவுள்ளன. இந்தக் கட்டிட நிர்மானப்பணிகள் இரண்டு வருடங்களுக்குள்; நிறைவு செய்யப்படவுள்ளது.