செங்கலடி அறநெறிக் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்திடும் விழிப்புணர்வு பேரணி


(சந்தோஷ்)
செங்கலடி பிரதேசத்தின் பழைய ஊர்சண்முகா அறநெறிப் பாடசாலை நிருவாகத்தினர், பழயை ஊர் முத்துமாரி அம்மன் ஆலய நிருவாகத்தினர்ம, ற்றும் பழைய ஊர் அம்மன் புரம் கிராம அபிவிருத்திச் சங்கத்தினரதும் ஏற்பாட்டில் வழிப்புணர்வு
 பேரணி இடம்பெற்றது. அறநெறிக் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்திடுவோம் எனும் தொணிப்பொருளில் மாணவர்களினால் இவ் விழிப்புணர்வுப் பேரணி மேற்கொள்ளப்பட்டது.
ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் தவறாமல் அறநெறி வகுப்பிற்கு செல்வதை உறுதிப்படுத்துவதாக  பேரணி இன்று காலை 9.00 மணியளவில் சண்முகா அறநெறிப் பாடசாலையில் இருந்து ஆரம்பமாகி செங்கலடி பிரதான வீதி விழியாக குமாரவேலியார் கிராம உள்வீதிகளினூடாகவும் சென்று அறநெறிப் பாடசாலையை மீண்டும் அடைந்தது.