கைவிடப்பட்ட பஸ் ஊழியர்களின் போராட்டம்! ஆரம்ப கட்டணம் 12 ரூபா!


தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் முன்னெடுக்கவிருந்த வேலை நிறுத்தப் போராட்டம் தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தினருக்கும் அமைச்சருக்குமிடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து கைவிடப்பட்டுள்ளது.

அண்மையில் ஏற்பட்ட எரிபொருள் விலையின் அதிகரிப்பின் காரணமாக பஸ் உரிமையாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இந் நிலையில் அரசாங்கம் தமக்கான உரிய தீர்வை பெற்றுத் தர மறுத்தால் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடபோவதாக தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் அறிவித்திருந்தது.

இந் நிலையில் அமைச்சரவையில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் எட்டப்பட்ட முடிவுகளுக்கு அமைவாக பஸ் கட்டணம் 12.5 சதவீதத்தினாலேயே அதிகரித்துள்ளது. அதன்படி ஆரம்ப கட்டம் 12 ரூபாவாகும்.

இந்நிலையில் பஸ் கட்டணத்தை 6.56 வீதத்தால் அதிகரிப்பதாகவும் ஆரம்ப கட்டணத்தில் எவ்வித மாற்றமும் இல்லை என்று நேற்று அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.