மட்டக்களப்பில் இருந்து யாழ் நோக்கி பயணித்த அரச பேரரூந்து மீது கல் வீச்சு !!


மட்டக்களப்பு ஏறாவூர்பற்று பிரதேசத்திலுள்ள பெரியபுல்லுமலையில் போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீர் தயாரிக்கும் தொழிற்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் இந்த தொழிற்சாலை அமைக்கும் பணியினை நிறுத்தக்கோரியும் வாழைச்சேனை வாகரை மற்றும் கிரான் ஆகிய பிரதேசங்களில் இன்று வெள்ளிக்கிழமை ((7) பூரண ஹர்த்தால் கடையடைப்பு அனுஸ்டிக்கப்பட்டது.

இதன் காரணமாக அந்த பிரதேசத்திலுள்ள பாடசாலைகள் இயங்கவில்லை.சந்தைகள் கூடவில்லை, வியாபார நிலையங்கள் மூடப்பட்டுள்ளது.உள்ளுர் போக்குவரத்து சேவை தடைப்பட்டது.அரச அலுவலகங்கள் பொதுமக்கள் வரவின்றி ஸ்தம்பிதம் அடைந்து காணப்பட்டது.

இதேவேளை மட்டக்களப்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்று கொண்டிருந்த அரச பேருந்து வண்டிமீது களுவன்கேணி பிரதேசத்தில் வைத்து கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் பேருந்தின் முன்பக்க கண்ணாடி சேதமடைந்துள்ளது.இதனால் பயணிகளின் போக்குவரத்தில் சிரமம் ஏற்பட்டது.குறித்த பேருந்து வாழைச்சேனை பேருந்து சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. வாழைச்சேனை பொலிசார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

அத்துடன்; பொதுமக்களுக்கு அசம்பாவித நிலமைகள் ஏற்படாது தடுக்கும் வகையில் பிரதேசத்தில் பாதுகாப்பு கடமைகளில் பொலிசார் ஈடுபட்டிருந்தமையினை காணக்கூடியதாக இருந்தது.