கடந்த சில மாதங்களாக பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக இருந்த கொள்ளையர் கைது ! 15,60000 பெறுமதியான நகைகள் மீட்பு

 
(எஸ்.ராம் )
கடந்த சில மாதங்களாக வெல்லாவெளி , அக்கரைப்பற்று , கல்முனை,  காரைதீவு ,சம்மாந்துறை , திருக்கோவில் சவளக்கடை போன்ற பிரதேசங்களில்   பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக  இருந்த கொள்ளையர்கள் கைது

தொடர்சியாக நடைபெற்ற கொள்ளை சம்பவங்கள் தொடர்பாக கல்முனை பிராந்தியத்துக்கு பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகர் ஹேரத் வழிகாட்டலில்  உப பொலிஸ் பரிசோதகர்  அருணன் ,
  சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி இப்னு அஸார் தலைமையில்   ,  சம்மாந்துறை  பொலிஸ் நிலைய பெருங்குற்ற  பொறுப்பதிகாரி விஜயராஜா ,   பொலிஸ் சார்ஜன்ட் ஜீவரத்தினம் , பொலிஸ் உத்தியோகத்தர்  லோகேஸ்வரன்     இணைந்த விசேட தனிப்படையானது மேற்படி கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகநபர் பற்றி  முடுக்கி விடப்படட விசாரணையின் போது  பிரதான சந்தேகநபரான வீரமுனையை சேர்ந்த 23 வயதான சந்தேகநபர்   இன்றைய தினம்  கைது செய்யப்பட்டார் .

சந்தேக நபரிடம் மேற்கொண்ட விசாரணையின் போது  பல்வேறு இடங்களில் கொள்ளையடிக்கப்பட்ட  சுமார் 15, 60000 ரூபா  பெறுமதியான தங்க நகைகள் மட்டக்களப்பு, காத்தான்குடி, கல்முனை ,அக்கரைப்பற்று  பிரதேச நகைக்கடைகளில் அடகு வைக்கப்பட்டிருந்தது.
இவை மீள பெறப்பட்டதுடன் சந்தேக நபரால்   களவாடப்படட மோட்டார்  சைக்கிள் ஒன்றும் கைப்பற்றப்பட்டது .

  நாளை சம்மாந்துறை நீதவான் நீதிமன்றத்தில்  ஆஜர் படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர் .
முக்கிய செய்திகளை உடனுக்குடன் WhatsApp இல்  தெரிந்துகொள்ள 
  +94771660248 இந்த இலக்கத்தை உங்கள் தொலைபேசியில் Battinews என Save பண்ணுங்கள் 
 உங்கள் WhatsApp இருந்து JOIN என மேலே குறிப்பிட்ட எமது இலக்கத்துக்கு ஒரு மெசேஜ் அனுப்புங்கள்