துரைவந்திய மேட்டுக்கிராமத்தில் சேனா புழுவைக்கட்டப்படுத்துவது தொடர்பான விழிப்புணர்வுப் பேரணி

 (சா.நடனசபேசன்)

சேனைக்குடியிருப்பு விவசாய விரிவாக்கல் நிலையத்திற்குட்பட்ட துரைவந்தியமேட்டுக்கிராமத்தில் சேனா புழுவைக்கட்டுப்படுத்துவது தொடர்பான விழிப்புணர்வு ஊர்வலமும் சோளன் அறுவடை விழாவும் வெள்ளிக்கிழமை  வே.பாலு என்பவரது தோட்டத்தில் விவசாயப்போதனாசிரியர் தி.செந்தூரன் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் அம்பாரை மாவட்ட பிரதி விவசாயப்பணிப்பாளர் விரிவாக்கம் (இ.மா) எம்.எஸ்.ஏ.சனீர் உதவி விவசாயப்பணிப்பாளர் அப்துல் மஜீத்  பாடவிதான உத்தியோகத்தர்களான எஸ்.எச்.ஏ.நிகார் ஏ.செய்லாப்தின்,பண்ணை முகாமையாளர் எம்.வை.எம். நியாஸ் தொழில்நுட்ப உதவியாளர் எல். தீபாளீனி மற்றும் அலுவலக உத்தியோகத்தர்கள் மற்றும் அதிகளவான தமிழ் முஸ்லிம் விவசாயிகள் கலந்துகொண்டனர்