உலகில் உள்ள 750 கோடி மக்களையும் கட்டுப்படுத்துவது ஒரு சில நபர்களே ! உலகின் பலம் வாய்ந்த 10 நபர்கள் !

(சகி )
இன்று இந்த உலகில் எழுநூற்றைம்பது கோடி மக்கள் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். பெரும்பாலும் நாம் நினைக்கிறோம் நம்மை கட்டுப்படுத்தும் சக்தி பணம் என்று  ஆனால் யதார்த்தமான உண்மை என்னவென்றால் இந்த உலகில் உள்ள எழுநூற்றைம்பது கோடி மக்களையும் கட்டுப்படுத்துவது உலகில் பலம் வாய்ந்த ஒரு சில நபர்களே (World's Most powerful peoples).
கடந்த வருடங்களில் உலகின் பலம் வாய்ந்த நபர்களின் பட்டியலை அமெரிக்க நாட்டின் Forbes magazine வெளியிட்டுள்ளது. 
இந்த எழுநூற்றைம்பது கோடி மக்களையும் ஏதோ ஒரு வகையில் பாதிக்கும் முதல் பத்து நபர்கள் இவர்கள் தான்.



10. Larry page (கூகுள் நிறுவனத்தின் உரிமையாளர்)

இவர் தான் பத்தாவது இடத்தில் உள்ளார். இன்று நாம் நமக்கு ஏதாவது ஒன்றை பற்றி அறிந்து கொள்ள வேண்டுமென்றால் உடனேயே கூகுளில் தான் தேடுகிறோம். நாம் அதிகம் பாவிக்கும் Youtube கூகுள் நிறுவனத்திற்கு சொந்தமானது. இன்று அதிகமானவர்கள் Google map ஐ பார்த்து தான் உலகின் எல்லா இடங்களையும் அறிந்து அங்கு செல்கிறார்கள். அதிகமான மக்கள் Android கைதொலைபேசிகளை பாவிக்கிறார்கள்.
Google map, android இவை இரண்டும் கூகுள் நிறுவத்திற்கு சொந்தமானது. இவை அனைத்தும் இந்த நிறுவனத்தின் உரிமையாளர் Larry page அவர்களுக்கு சொந்தமானது.

9. நரேந்திர மோடி (இந்தியாவின் பிரதமர்)

இவர் ஏன் இந்த பட்டியலில் ஒன்பதாவது இடத்தில் இருக்கிறார் என்றால்
உலகில் சனத்தொகை அதிகம் உள்ள இரண்டாவது நாடு இந்தியா. அத்துடன் உலகில் அதிகம் இளைஞர்கள் இருக்கும் நாடு இந்தியா. மேலும் பலம் வாய்ந்த இராணுவம் மற்றும் ஆயுதங்கள் கொண்ட ஒரு ஆசிய நாடு இந்தியா.
இந்தியாவை பொறுத்தவரை நாட்டை கட்டுப்படுத்துவதோ அல்லது நாட்டின் பலம் வாய்ந்த நபர் என்றாலோ அது அந்த நாட்டின் பிரதமர் தான்.  ஆகவே இந்தியாவின் பிரதமராக யார் இருந்தாலும் அவர் இந்த பட்டியலில் இடம் பிடிப்பார்.

8. மொஹமட் பின் சல்மான் (சவுதி அரேபியாவின் இளவரசர்) 

சவுதி அரேபியாவில் இருக்கும் எண்ணைக் கினறுகள் தான் அந்த நாட்டின் பலம். அந்நாட்டின் மன்னர் தம்முடைய பலத்தை கொண்டு சவுதி அரேபியாவை உலகில் பலம் வாய்ந்த ஒரு நாடாக மாற்ற பல நடடிக்கைகளை மேற்கொள்கிறார். ஆனால் சவுதி அரேபியாவின் மன்னரை  அந்நாட்டின் இளவரசர் மொஹமட் பின் சல்மான் அவர்கள் தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருந்து நாட்டை அபிவிருத்தியை நோக்கி கொண்டு செல்கிறார் என சொல்லப்படுகிறது.

7. Bill Gates 

இவர் ஆரம்பித்த அதாவது மைக்ரோ சொப்ட் தயாரித்த windows operating system இதை தான் நம்மில் பலர் இன்றும் கனணிகளில் பாவிக்கின்றோம்.
மேலும் ஒரு காலத்தில் உலகின் முதல் பணக்காரராக இருந்த இவர் தான் சம்பாதித்த பணத்தில் முக்கால்வாசியை ஆபிரிக்காவில் உள்ள ஏழைக் குழந்தைகளுக்கு செலவழிக்கிறார் என்பது உண்மை.

6. போப் பிரான்ஸிஸ் (Pope francis)

இன்று உலகில் மிகப்பெரிய மதம் கிறிஸ்தவம். கிறிஸ்தவ மதத்தின் மிகப்பெரிய தலைவர் இவர். ஆகவே இவர் இந்த பட்டியலில் ஆறாவது இடத்தில் உள்ளார்.

5. Jeff bezos (அமேசன் நிறுவனத்தின் உரிமையாளர்)

Amazon நிறுவனம் தான் இன்று உலகிலேயே மிகப்பெரிய Online shopping என்ற ஒன்றை நடத்துகின்றது. உலகில் எந்த மூலையில் இருக்கும் பொருட்களையும் நாம் வீட்டில் இருந்தபடியே வாங்க கூடிய ஒரு Online shop இது. இதன் உரிமையாளர் ஏன் இந்த பட்டியலில் இருக்கிறார் என்றால் எதிர்காலத்தில் மக்கள் அனைவரும் இவரது பொருட்களை வாங்க தொடங்கும் போது உலகில் ஒவ்வொரு பொருளுக்கும் இவர் நிர்ணயிக்கும் விலைக்கு தான் நிறுவனங்கள் தங்கள் பொருட்களை விற்க வேண்டிய நிலை வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

4. Angela Merkel (Chancellor of Germany)


இன்று ஐரோப்பாவில் மிகப்பெரிய நாடு எது என்றால் அது ஜேர்மன் தான். ஐரோப்பாவில் உள்ள அனைத்து நாடுகளையும் அடித்து பின்தள்ளி அதிகாரத்தை தம்வசமாக்கி கொண்டுள்ள பலம் வாய்ந்த நாடான ஜேர்மன் நாட்டின் மிகப்பெரிய தலைவர்  Angela Merkel அவர்கள். இவர் அந்நாட்டை Digital Germany என்ற தொனியில் தொழில்நுட்ப ரீதியாக பாரிய அபிவிருத்திக்கு கொண்டு சென்றுள்ளார். அதனால் இவர் உலகின் பலம் வாய்ந்த ஒரு நபராக இருக்கிறார்.

3. Donald Trump (அமெரிக்காவின் ஜனாதிபதி)


அமெரிக்கா உலகின் மிகப்பெரிய வல்லரசு நாடாக இருப்பதால் அந்நாட்டின் ஜனாதிபதி உலகின் பலம் வாய்ந்த நபராக இருக்கிறார்.

2. Vladimir Putin (ரஷ்ய நாட்டின் அதிபர்)

இவர் ரஷ்ய நாட்டில் நீண்ட காலமாக அதிபர் பதவியில் இருக்கிறார் அதாவது பதினெட்டு வருடங்களாக இவர் தான் தேர்தலில் வென்று கொண்டிருக்கிறார். இவரை எதிர்த்து அங்கு யாரும் போட்டி போடுவதில்லையாம் அப்படி எதிர்ப்பவர்களை இவர் விட்டுவைப்பதில்லை என்றும் கூறப்படுகின்றது.

 1. Li Keqiang (premier of china)

இவர் தான் உலகின் மிகப்பெரிய பலம் வாய்ந்த நபர். சீனாவை ஒரு மிகப்பெரிய உற்பத்தி நாடாக உருவாக்குவதே இவரது நோக்கம். அதை இவர் நடைமுறைபடுத்திக் கொண்டு தான் இருக்கிறார். நாம் பாவிக்கும் எல்லா பொருட்களிலும் ஏதோ ஒரு சிறு பகுதியாவது சீன நாட்டு தயாரிப்பாக தான் இருக்கின்றது.

இவர்கள் அனைவரும் தான் இந்த உலகில் வாழும் மக்களின் வாழ்க்கையில் ஏதோ ஒரு வகையில் ஆதிக்கம் செலுத்தும் பலம் வாய்ந்த நபர்கள்.