அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் காபட்வீதி,தேசிய பாடசாலைக்கான நினைவுப்படிவத்தை திறந்து வைத்தார்.

(க. விஜயரெத்தினம்)


பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட களுதாவளை மாகாவித்தியாலயத்தை கடந்த 28.01.2019 திகதியன்று கல்வி இராஜங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனால் தேசிய பாடசாலையாக தரமுயர்த்தப்பட்டது.இவ்வாறு தேசிய பாடசாலையாக தரமுயர்த்தப்பட்ட பாடசாலைக்கு சனிக்கிழமை(9) வருகைதந்த கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் அவர்களினால்  களுதாவளை சுயம்புலிங்க ஆலயத்திற்கான காபட்வீதியை நாடாவெட்டி திறந்து வைப்பதையும்,தேசிய பாடசாலைக்கான நினைவுப் படிவத்தை உத்தியோகபூர்வமாக திறந்து வைத்தார்.இதன்போது 75 மில்லியன் ரூபா பெறுமதியான விளையாட்டு உபகரணத்தொகுதி,வகுப்பறை உள்ளிட்ட பாடசாலை உட்கட்டமைப்பு வசதிக்கான அடிக்கல் நாட்டப்படுவதையும்,மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன்,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் த.கனகசபை,வலயக்கல்வி பணிப்பாளர் நகுலேஸ்வரி புள்ளநாயகம்,பிரதேச செயலாளர் சிவப்பிரியா வில்வரெத்தினம் உள்ளிட்ட அதிதிகளையும் படத்தில் காணலாம்.