குப்பை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்பாட்டம்





செங்கலடி நிருபர்

மட்டக்களப்பு – கிரான் பறங்கியாமடு கிராமமக்கள் குப்பை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று பி;.ப வாழைச்சேனை கோரளைப்பற்று பிரதேசபையினால்; குப்பை கொட்டும் பகுதியில் குப்பை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்பாபட்டத்தில் ஈடுபட்டனர்.

கிரான் பறங்கியாமடு பிரதேசத்தில் வாழைச்சேனை கோரளைப்பற்று பிரதேசபையினால் குப்பை கொட்டப்பட்டு வருகின்றமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே மக்கள் இவ் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


சுமார் 130 குடும்பம் பறங்காயாமடு இக்கிராமத்தில் உள்ளதாகவும் பிதேசசபையினால் கொட்டப்படும் குப்பைகளினால் தாம் பெரிதும் சிரமப்படுவதாவும் பல தடவை இது தொடர்பாக பிரதேச சபையிடம் முறையிட்டும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தெரிவித்தனர்.
குறித்த இடத்தில் பிரதேச சபையினால் கொட்டப்படும் குப்பையையை உட்கொள்ள காட்டு யானைகள் வருவதாகவும் இதனால் அவ் வீதியால் பயணிக்க சிரமப்படுவதாகவும் , வைத்தியசாலைக் கழிவுகளும் இவ்விடத்திலேயே கொட்டப்படுவதாகவும் இதனால் தமது கால்நடைகள் அவற்றை உட்கொண்டு நோய்வாய்ப்பட்டு இறப்பதாகவும் மற்றும் துர்நாற்றத்தினால் பெரிதும் சிரமப்படுவதாகவும் கூறி தமது பிரதேசத்தில் குப்பை கொட்ட வேண்டாம் என கூறியே மக்கள் இவ் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டனர்.