உலகையே உலுக்கிய உயிர்த்த ஞாயிறு படுகொலை - ஒரு பார்வை

 
உலகையே உலுக்கிய உயிர்த்த ஞாயிறு படுகொலை 
ஒரு பார்வை

(ஆர்.சயனொளிபவன் & TEAM ) 

மிக துல்லியமாக திட்டமிட்டு பெரிய அளவிலான மனித பேரழிவை ஏற்படுத்தக்கூடிய வகையில் அரங்கேற்றப்பட்ட ஒரு மிருகத்தனமான படுகொலையாகும். உலக பத்திரிகையாளர்களை பொறுத்தளவில் இந்த மனித படுகொலையானது ஒரு தனி குழுவால் மேற்கொள்ளமுடியாத அளவிற்கு திட்டமிட்டு ஒரே நேரத்தில் பல இடங்களில் குறிப்பிட்ட மனித வர்க்கத்தை குறி வைத்து அத்தோடு குறிப்பிட்ட நேர காலத்திற்குள் மிக கூடுதலான அப்பாவி மக்களின் உயிர்களை பறிக்கக்கூடிய வகையில் திட்டமிட்ட முறையில் மேற்கொள்ளப்பட்ட ஒரு பாரிய மிருக்கத்தனமான மனித படுகொலைகள் ஆகும் .
மட்டக்களப்பு சீயோன் தேவாலயம் 
கொலையாளிகள்
  • 290 உயிர்களை பலி எடுத்தும் 
  • 450 வரையிலான மக்களை படுகாயபடுத்தியும் 
  • 6 இடங்களில் ஒரே நேரத்தில் படுகொலைத்தாக்குதல்களை மேற்கொண்டும் 
  •  ஒரு குறிப்பிட்ட வகை மக்களை குறிவைத்தும்
  • மேற்கொள்ளப்பட்ட தாக்குதலாகும்.
இலங்கை தீவு உலகிலேயே துரதிஸ்ட்டவசமும் துயரமான காரணங்களுக்காக ஒரு பேச்சு பொருளாக உலக அரங்கில் இடம்பிடடிப்பது ஒன்றும் புதிய விடயமல்ல ஆனால் உயிர்த்த ஞாயிறு படுகொலை முதன் முறையாக  உலகில் உள்ள எல்லா மக்களையும் அனைத்து சர்வதேச ஊடகங்களையும்  அத்தோடு  உலக தலைவர்களையும் உலுக்க  வைத்து எமது பக்கம் திரும்ப வைத்துள்ளது.
எட்டு  இடங்களில் பயங்கரவாத தாக்குதல்
  • மூன்று தேவாலயங்கள் 
  • மூன்று ஹோட்டல்கள் 
  • இரு வேறு இடங்களில் பயங்கர வாதிகளின் வதிவிடங்களாகவும் 
தாக்குதல்கள் நடந்த விதத்தை பார்ப்போமானால் முதல் ஆறு தாக்குதல்களும் நன்கு திட்டமிட்டமுறையில் ஒரு குறிப்பிட நேர இடைவெளியில் வெவ்வேறு இடங்களில் மிகவும் துல்லியமாகவும்,  மிக கூடுதலான மனித பேரழிவை ஏற்படுத்த கூடிய வகையிலும்  மேற்கொள்ளப்பட்ட ஒரு மிருகத்தனமான படுகொலையாகும்

தெரிவு செய்யப்பட்ட நேரம் , தினம் , மற்றும் இடங்கள் இந்த கொடூரமான பயங்கரவாத தாக்குதலில் முக்கியமாக பார்க்கவேண்டிய காரணிகளாகும்

தினம்:- கிறிஸ்தவ மக்களை பொறுத்த அளவில் இது அவர்களுடைய நாள்காட்டிகளில் (காலண்டர்களில்) ஒரு மிக முக்கியமான புனித தினமாகும்  மிக கூடுதலான கிறிஸ்தவ  மக்கள்  தேவாலயங்களுக்கு சென்று உயிர்த்த ஞாயிறு ஆராதனையில் ஈடுபடுவது வழக்கமாகும்   .

கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம்  

அதே போல் ஐரோப்பியர்களை பொறுத்தளவில் பல காரணங்களால் ஈஸ்டர் விடுமுறை ஓய்வு என்பது ஒரு சிறிய விடுமுறைக்கு  சிறந்த காலமாகும் அண்மை காலமாக இலங்கை இவர்களுக்கு ஒரு சிறந்த இடமாகவும்  விளங்குகின்றது. அதுவும் எது ஒரு சிறிய கால விடுமுறை என்பதால் மிக கூடுதலானவர்கள் தலைநகர்களை அண்டிய ஹோட்டல்களில் தங்குவது வழமை. ஐரோப்பிய நாடுகளை பொறுத்த அளவில் கூடுதலான நாடுகளில் இந்தக்காலப்பகுதியானது 4 நாட்களை கொண்ட  விடுமுறையாகும்  அதாவது ஐரோப்பியர்கள் விடுமுறையை முடித்துவிட்டு தாக்களுடைய நாடுகளுக்கு திரும்புவது திங்கள்கிழமை அதாவது ஞாயிறு அவர்களது கடைசி விடுமுறை நாளாகும்.

அதே வேளை இலங்கை தீவை  பொறுத்த அளவில் உல்லாசத்துறை பெருமளவு வருமானத்தையும் அத்தோடு கணிசமான அளவு ஐரோப்பியர்களையும் உள்வாங்கும் ஒரு துறையாக உள்ளது. மேலும்  2.5 மில்லியன் உல்லாசப்பிரயாணிகளை ஒரு வருடத்திற்கு வருகைதரும்   ஒரு நாடாகவும்  இலங்கை தீவு உள்ளது. கொலையாளிகளை பொறுத்த அளவில் மிக கூடுதலான அளவில் ஐரோப்பியர்களுக்கு உயிர் அழிவை கொண்டு வரக்கூடிய ஒரு காலப்பகுதி  போல் தென்பட்டுள்ளது
நீர்கொழும்பு சென். செபஸ்டியன் தேவாலயம் 

பயங்கரவாத தாக்குதல்களை நடத்தியவர்கள் மேற்குறிப்பிட்ட விடயத்தை துல்லியமாக அவர்களது திட்டமிடலில் உள்வாங்கியுள்ளார்கள் போல்  தென்படுகின்றது. அவர்களை பொறுத்தளவில் பெரும் மனித அழிவை  மத தளத்திற்கு ஆராதனைக்கு வந்தவர்களுக்கும் அத்தோடு  விடுமுறையில் வந்த உல்லாசப்பிரயாணிகளுக்கும் ஏற்படுத்தியுள்ளதை காணக்கூடியதாக உள்ளது.

கொலைசெய்யப்பட்ட 208 பேரில் 35 வெளிநாட்டவர்களும் உள்ளடங்குகின்றனர்.

நேரம்:- மூன்று தேவாலயங்களிலும் கொழும்பு,நீர்கொழும்பு, மட்டக்களப்பு ஆகிய இடங்களில் உயிர்த்த ஞாயிறு ஆராதனை நடந்து கொண்டிருந்த வேளை  காலை 8.30 இருந்து 8.45 வரையிலான காலப்பகுதியில் இந்த பயங்கரவாத தற்கொலை தாக்குதல் அரங்கேற்றப்பட்டுள்ளது

இதே போல் கொழும்பில் உள்ள மூன்று ஹோட்டல்களிலும் தேவாலயங்களில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதல்கள் போல் காலை 8.30 இருந்து 9.00 மணிவரையான காலப்பகுதியே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. மீண்டும் இந்த நேரத்தையும் ஹோட்டலின் இடத்தையும் பார்ப்போமானால் சங்கரில்ல ஹோட்டலின் காலை உணவு அருந்தும் இடம் தேர்தெடடுக்கப்பட்டுள்ளது. தற்போது வரை மற்றய இரு ஹோட்டல்களிலும் எந்த இடத்தில் இந்த பயங்கரவாத தாக்குதல் இடம் பெற்றது என்று தெரியவில்லை. ஆனால் நட்சத்திர ஹோட்டல்களில் இந்த காலப்பகுதிகளில் தான் மிககூடுதலான மக்கள் உணவு அருந்துவதற்காக கூடுவார்கள்.
மீண்டும் ஒரு முறை நேரமும் மிக துல்லியமான முறையில் திட்டமிட்டு தேர்தெடுக்கப்பட்டுள்ளதை காணக்கூடியதாக உள்ளது. கொலையாளிகள் மிக கூடுதலான மனித அவலத்தை ஏற்படுத்த கூடிய வகையில் நேர தெரிவும் அமைந்துள்ளது

ஷங்கரிலா ஹோட்டல் கொழும்பு 
இடம்:- தேர்ந்தெடுத்த இடங்கள்

1.மிக கூடுதலான மனித அழிவை ஏற்படுத்த கூடிய வகையில் சமயரீதியாக தேவாலயங்களும்,அத்தோடு  கிறிஸ்தவர்களுக்கான அதி முக்கிய  நாளான உயிர்த்த ஞாயிறும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது

2. இலங்கையிலே  மிக கூடுதலாக மூன்று இனமும் வாழும் இடங்களாக கிழக்கு மாகாணமும் மேல் மாகாணமும் அமைந்துள்ளது , அணைத்து தாக்குதல்களும் இந்த இரு மாகாணங்களிலும் தான் இடம்பெற்றுள்ளது. அதுவும் மற்றுமொரு  விடயமும் துல்லியமாகின்றது அதாவது மட்டக்களப்பு தாக்குதலை பொறுத்த அளவில் படுகொலை செய்யப்பட்ட அனைவரும் கிறிஸ்தவ மத  தமிழர்களே. இத் தாக்குதல் மூலம் பயங்கரவாதிகள் அல்லது கொலையாளிகள் இன்னொரு செய்தியையும் கூற வருகின்றார்களா அல்லது இந்த இடம் இவர்களுக்கு ஏதுவாக உள்ள இடமாக இருந்ததா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
தற்கொலைதாரிகள்  பதுங்கிருந்த என கூறப்படும் மறைவிடம் 

3. மற்றும் படுகொலை செய்யப்பட்டவர்களில்  மிக கணிசமான அளவு தமிழர்களும் மற்றும் சிங்கள மக்களாகவும் உள்ளனர். அதேவேளை ஐக்கிய ராட்சியா  டெய்லி மெயில் பத்திரிகை தனது நீண்ட பத்தியில் இஸ்லாமிய பயங்கரவாதிய இயக்கம் ஒன்றின்  பெயரை இத் தாக்குதலுடன் தொடர்புபடுத்தியுள்ளது .   

4. நட்சத்திர ஹோட்டல்களை பொறுத்தளவில் பயங்கரவாத தாக்குதல்கள் நடைபெற்ற ஹோட்டல்களில் கணிசமான ஐரோப்பியர்களும் மற்றும் இந்தியர்களும் தங்கும் இடமாகவும் உள்ளது.


மீண்டும் ஒரு முறை இந்த தாக்குதல்கள் குறிப்பிட்ட ஒரு வகை  இன மக்களை கொலைசெய்ய நன்கு திட்டமிட்ட முறையில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதல்களாகும். மேலும் இவர்கள் தங்களுடைய இந்த பயங்கரவாத தாக்குதல்களால் ஒன்றுமே அறியாத அப்பாவி மக்களின் உயிர்களை பறித்தெடுத்துள்ளார்கள். இந்த கொலையாளிகளும் அத்தோடு இத் தாக்குதலுக்கு  துணையாக இருந்த அனைத்து  பயங்கரவாதிகளும் சரியான முறையிலும் விரைவாகவும் தண்டிக்கப்படவேண்டும்.
கொழும்பு, கிங்ஸ்பெரி ஹோட்டல்


எது எப்படியாக இருந்தாலும்
  • போன அப்பாவி மக்களின் உயிர்கள் திரும்ப வரப்போவதில்லை 
  • உலகில் உள்ள ஒரு முக்கிய  சமயத்தின் அதி முக்கிய சமய நாளில் இடம்பெற்ற இந்த படுகொலையை எந்த வகையிலும் நியாய படுத்தமுடியாது 
  • இந்த நிகழ்வானது இலங்கை பொறுத்த அளவிழும் உலகில் மனிதத்தன்மையை நேசிக்கின்ற மக்களை பொறுத்த அளவிலும்  இது ஒரு கரிநாள் ஆகும் . . உலக  தலைவர்களின் கண்டன செய்திகளிலும் (டொனால்ட் டிரம் , புட்டின் , திரேசா மே, நரேந்திர மோடி  , பாப்பரசர்) மற்றும் உலகின் பிரசித்த கோபுரம் ஈபிள் டவர், வழமைக்கு மாறாக  தனது விளக்குகளை அணைத்து கரி நாளை நினைவுகூர்த்துள்ளது. 
  • இலங்கை தீவை பொறுத்தளவில் உல்லாச பயணத்துறை   ஒரு முக்கிய வருமானம் ஈட்டும் ஒரு துறையாக உள்ளது. இத் துறைக்கும் பொருளாதாரத்திற்கும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்காவது பின்னடைவை ஏற்படுத்தும்  என எதிர்வுகூறப்படுகின்றது. 

 LIVE UPDATES : குண்டுவெடிப்பு தொடர்பான செய்திகள்
குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பான செய்திகளை உடனுக்குடன்   பேஸ்புக் ஊடாக தெரிந்துகொள்ள எமது பக்கத்தை லைக் செய்துகொள்ளுங்கள்

செய்திகளை உடனுக்குடன் WhatsApp இல்  தெரிந்துகொள்ள 
  0771660248 இந்த இலக்கத்தை உங்கள் தொலைபேசியில் Battinews என Save பண்ணுங்கள்  , உங்கள் WhatsApp இருந்து JOIN என மேலே குறிப்பிட்ட எமது இலக்கத்துக்கு ஒரு மெசேஜ் அனுப்புங்கள்