LIVE UPDATES : குண்டுவெடிப்பு தொடர்பான செய்திகள்


23.04.2019 :
11.40 AM : மட்டக்களப்பு  தற்கொலை குண்டுதாரி காத்தான்குடியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது

22.04.2019
07.45PM : 
05.15PM : கொழும்பு கொச்சிக்கடை பகுதியில் வேனில் இருந்த குண்டு வெடிப்பு - சேதம் எதுவும் இல்லை
05.00PM : கொழும்பிலுள்ள ஷங்ரிலா ஹோட்டலில் நடத்தப்பட்ட தற்கொலை குண்டுதாரி, அவிசாவளை - வெல்லம்பிட்டி வீதியிலுள்ள நிறுவமொன்றின் உரிமையாளரான இன்சான் சீலவனன் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார் என, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில், பொலிஸார் இன்று அறிவித்துள்ளனர்
03.00PM : நாளை தேசிய துக்க தினமாக பிரகடனம் 
09.00AM : காத்தான்குடி மற்றும் மாவனல்லயை சேர்ந்த இருவர் கைது
08.49 AM : வெடிப்புச் சம்பவங்கள் தொடர்பில் இதுவரை 24 பேர் கைது 
08.15 AM : உலகையே உலுக்கிய உயிர்த்த ஞாயிறு படுகொலை - ஒரு பார்வை
07.00 :AM ஊரடங்கு சட்டம் இன்று காலை 6 மணிமுதல் தளர்த்தப்பட்டுள்ளது
05.00 AM : கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு உள் நுழையும் ஆடி அம்பலம வீதியில் இருந்து பி.வீ.சி. குழாயில் பொருத்தப்பட்டு தயார் செய்யப்பட்ட 6 அடி வரை நீளமான குண்டு விமானப்படையினரால் மீட்கப்பட்டு செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளது.
------11.50PM : வெடிபொருள் கொண்டு வந்த சந்தேகத்தில் ஒருவர் கைது , பயன்படுத்தப்பட்ட வீடு தொடர்பில் தகவல்

10.05 PM : வெடிப்புச் சம்பவம் தொடர்பில் 13 பேர் கைது
09.50 PM ; மட்டக்களப்பு தற்கொலை தாக்குதல்  தற்கொலையாளியின்  தலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது  http://www.battinews.com/2019/04/BATTICALOA-SUICIDE-ATTACKER-HEAD-FOUND.html

08.50pm : குண்டுவெடிப்பில் உயிரிழந்த வெளிநாட்டு பிரஜைகள் விபரம் - ஊர்ஜிதப்படுத்தப்பட்டது
07:40 PM :    வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் 32  பேர்  பலியாகியுள்ளனர்.               இதில் அமெரிக்கா, ஐரோப்பிய, சீனா நாட்டவர்கள் அடங்குகின்றனர்.

07.10 PM : இன்று மாலை 5.30 மணியளவில் பாதுகாப்பு ஊடக சந்திப்பு இடம்பெற்றது இதில் பொலிஸ் பேச்சாளர் ஊடகப்பேச்சாளர் ருவான் குணசேகர பல கருத்துக்களை தெரிவித்தார் மிகவும் அத்தியாவசிய தேவைகளுக்கு வெளி இடங்களுக்கு செல்ல வேண்டி இருப்பின் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்தில் அதற்கான அனுமதியை பெற்று செல்லுமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். அத்துடன் நீங்கள் பணிபுரியும் அலுவலக அடையாள அட்டை, தேசிய அடையாள அட்டையினை கையில் வைத்திருக்க வேண்டும் http://www.battinews.com/2019/04/POLICE-ANNOUNCEMENT.html
06.50 PM : ஒரே பார்வையில் இலங்கையின் கறுப்பு நாள்
06.12 PM : மட்டக்களப்பில் கொல்லப்பட்டவர்களின் உடல்கள் அரச செலவில் நல்லடக்கம் 
06.00 PM : உயிரிழந்தோர் தொகை 207 ஆக அதிகரிப்பு . 500 பேர் காயம் 7 பேர் கைது : 9 வெளிநாட்டவர்கள் பலி
05.40  PM :  உயிரிழந்தோர் தொகை 207 ஆக அதிகரிப்பு . 450 பேர் காயம்
05.18 PM  :    190 பேர் பலி ,  7 பேர் கைது  , 9 வெளிநாட்டினர் ,
05.00 PM :  மட்டக்களப்பு மற்றும் கொழும்பு சங்கரிலா ஹோட்டலில் இடம்பெற்ற தாக்குதலின் பின்னணியில் Zahran Hashim மற்றும் Abu Mohammed என்பவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது .                     
04.40 PM :  சந்தேகத்தின் பேரில் 7 பேர் கைது
04.30 PM  :தெமட்டகொடவில் மூன்று வெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளது. அங்குள்ள மகாவில பூங்காவுக்கு அண்மையில் உள்ள வீடு ஒன்றில் வெடிபொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சம்பவ இடத்துக்கு பொலிஸார் வெடிகுண்டு மீட்கும் குழுவினர் செல்கின்றனர்.
03.40 PM :  நாட்டில் விசேட பொலிஸ் ஊரடங்குச் சட்டம்
12.50 PM : மட்டக்களப்பு வைத்தியசாலையில் இருந்து நேரடி ஒளிபரப்பு   
11.30AM  நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழப்பென அச்சம் – இரண்டு வெளிநாட்டு பிரஜைகளும் பலி

11.00AM : மட்டக்களப்பு - சியோன் தேவாலயத்தில் குண்டு வெடிப்பு! இதுவரை 27 பேர் பலி ...!: 100 க்கும் மேற்பட்டோர் காயம் :