சஹ்ரானுடன் பயிற்சி பெற்ற மேலுமொருவர் TID யினரால் கைது

பேராதெனிய பகுதியில் சஹ்ரானுடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேக நபர் தீவிரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

பேராதெனிய, ஹேந்தெனிய பகுதியை சேர்ந்த 29 வயதுடைய மொஹம்மது முக்தார் ஆசிப் ரஸாக் என்பவரே இவ்வாறு தீவிரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

குறித்த நபர் சஹ்ரானுடன் அருப்பல பகுதியில் பயிற்சி பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

சந்தேக நபர் இன்று (09) அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

சம்பவம் தொடர்பில் தீவிரவாத தடுப்பு பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.