ஜ.எஸ்.ஜ.எஸ் தீவிரவாத அமைப்பின் உயிரிழந்த சஹ்ரானின் தம்பி றில்வானின் மாமனார், வீட்டை உடைத்து கொள்ளை
(கனகராசா சரவணன்)

அம்பாறை சாய்ந்தமருது தற்கொலை குண்டுதாக்குதலில் உயிரிழந்த ஜ.எஸ்.ஜ.எஸ் தீவிரவாத அமைப்பின் றில்வானின் மாமனார், மாமியார் வீட்டை உடைத்து அங்குள்ள இலத்திரணியல் பொருட்கள் கொள்ளையிட்ட சம்பவம் புதன்கிழமை (07) மட்டக்களப்பு ஆரையம்பதியில் இடம்பெற்றுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்

கடந்த ஏப்பிரல் மாதம் சாய்ந்தமருது பிரதேசத்தில் இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதலில ஜ.எஸ்.ஜ.எஸ் தீவிரவாத அமைப்பின் சஹ்ரானின் தம்பி றில்வானின்  மனைவி உயிரிழந்தனர். இதில் உயிரிழந்த றில்வானின் மனைவியின் தந்தையார் தாயார் மட்டக்களப்பு ஆரையம்பதி கிழக்கு 2 ம் பிரிவு ஹியாயத் வீதியைச் சேர்ந்த சித்திக் பஜிதியா, முகமது நாசார் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் 

இந்த நிலையில் நிறையில் அடைக்கப்பட்ட அவர்களின் வீடு பூட்டப்பட்டுள்ளதுடன் அதன் அருகில் உள்ள அவர்களது மகள் பராமரித்து வருகின்றார். இந்த நிலையில் செவ்வாய்கிழமை இரவு பூட்டியிருந்த வீட்டின் கதவை உடைத்து அங்கிருந்த தொலைகாட்சி பெட்டி, 2 காஸ் சிலிண்டர், டிவிடி பிளேயர், ஜபாட், கைத் தொலைபேசி , அயன்பொக்ஸ் போன்ற பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது 


இது தொடர்பாக முகமது நாசாரின் மகள் பொலிஸ் நிலையத்தில் நேற்று புதன்கிழமை (07) பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார் இதணையடுத்து பொலிஸ் நிலைய பெரும் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி சிந்திக்க தலைமையில் பொலிஸ் சாஜன் ஏ.எல்.எம். முஸ்தப்பா தலைமையிலான பொலிஸ் குழுவினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டுவருவதாக பொலிசார் தெரிவித்தனர்.