கைக்குழந்தையுடன் வந்தவர்களுடன் மனிதாபிமானமற்ற முறையில் நடந்துகொண்ட திருக்கோவில் போக்குவரத்து பொலிசார்

இன்று காலை வைத்தியசாலைக்கு செல்வதற்காக பொத்துவில் இருந்து அக்கரைப்பற்று நோக்கி கைக்குழந்தையுடன் காரில் குடும்பத்தினர் பயணம் செய்துகொண்டிருந்த போது . தம்பிலுவில் பிரதான வீதியில் களுதாவளை ஆலயம் அருகே வைத்து போக்குவரத்து பரிசோதனை கடமையில் நின்றிருந்த திருக்கோவில் போக்குவரத்து போலீசார் காரில் வந்தவர்களை  நிற்பாட்டியுள்துடன் பின்னர்  காரை செலுத்தி வந்தவரிடம் சாரதி அனுமதி பத்திரம்    இல்லை என கைக்குழந்தையும் தாய் மற்றும் அவர்களுடன் வந்தவர்களை நடு வீதியில் இறக்கி விட்டு காரினை திருக்கோவில்  பொலிஸ் நிலையத்திற்கு எடுத்து சென்றுள்ளனர்.


காரின் ஏனைய ஆவணங்களை வைத்திருங்கள் குழந்தை மற்றும் காரில் வந்தவர்களை இறக்கிவிட்டு திரும்ப வருகிறோம் என பொலிசாரிடம் கூறியும் திருக்கோவில் போக்குவரத்து பொலிஸார்  மனிதாபிமானமற்ற  முறையில் நடந்துகொண்டுள்ளதாக காரில் வந்தவர்கள் தெரிவித்தனர்