முன்னாள் பட்டிருப்பு பாராளுமன்ற உறுப்பினர் பூ.கணேசலிங்கம் அவர்களின் சிலை நிர்மாணிப்புக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு


 பட்டிருப்புத் தொகுதியின் தமிழ் அரசுக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரர் பூபாலபிள்ளை கணேசலிங்கம் அவர்கள் இத்தொகுதியில் உள்ள மக்களுக்கு அவர் ஆற்றிய அளப்பெரும் மக்கள் சேவைக்காக அம்மக்களால் அவருக்கு அவர் பிறந்த ஊரான பெரியகல்லாற்றில் அவரின் உருவச்சிலை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று பெரியகல்லாற்றின் ம.தெ.எ.பற்று பிரதேசசபைக்குச் சொந்தமான நூலக கட்டட வளாகத்தில் மிகச்சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் கட்சிபேதம் இன்றி பட்டிருப்புத் தொகுதியிலுள்ள அனைத்து சமுக ஆர்வலர்கள்,  ஆலயவண்ணக்காமார்,  அத்துடன் இச்சிலை நிர்மாணிப்பு பணியினை ஒருங்கிணைக்கும் ஒருங்கிணைப்பாளர் எஸ. இன்பராஜா மேலும் தமிழ் அரசுக் கட்சியின் ம.தெ.எ.பற்று பிரதேசசபை உறுப்பினர் எஸ் . கணேசன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராஜா , சங்காரவேல் பௌண்டேஷன் அமைப்பின் பொருளாளர்  ந.குபேந்திரராஜா   ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

ம.தெ.எ.பற்று பிரதேசசபை உறுப்பினர் எஸ். கணேசன் தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் அமரர் பூபாளபிள்ளை கணேசலிங்கம் அவர்களுக்கு சிலை நிர்மாணிப்பதாக குறிப்பிட்டதை போன்று அதற்கான அனுமதி பெறல்
தொடங்கி அதை நிர்மாணிப்பதற்கான சகல பூர்வாங்கள் வேலைகளையும்; முன்னின்று செயற்படுத்தி அதை இன்று செயல் படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

இச்சிலை நிர்மாணிப்பு பணி முடிவுற்றதும் எதிர் வரும் ஒக்டோபர் மாதம் நடுப்பகுதியில் அங்குராப்பணம் நிகழ்வு நடை பெற உத்தேசிக்கப்பட்டுள்ளது. 
 ந.குபேந்திரராஜா தெரிவிக்கையில்  இச்சிலை அங்குராப்பணம் நிகழ்வுக்கு அமரர் பூபாலபிள்ளை கணேசலிங்கத்தின் புதல்வர்களில் ஒருவரான அவுஸ்ரேலியாவில் வசிக்கும்
முகுந்தன் கணேசலிங்கம் அவர்களும் கலந்து கொள்வார் என்றும் மேலும் முன்னாள் அரச அதிபர்   அமரர் பூ. சங்காரவேல் அவர்கள் அமரர் பூபாளபிள்ளை கணேசலிங்கத்தின் சகோதரர்  ஆவர் .