கணனி வலையமைப்பின் ஊடாக இலங்கையின் எப்பாகத்திலும் உள்ளவர்களின் பிறப்பு, இறப்பு, விவாக சான்றிதழ்களை பெற்றுக் கொள்ள முடியும்.


கடந்த காலங்களில் நாட்டில் ஏற்பட்ட அசாதாரண நிலையை அடுத்து ஆள் அடையாளத்தை நிரூபிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டு உள்ளது. ஆளடையாளத்தை உறுதிப்படுத்தும் தேசிய அடையாள அட்டை, வாகன சாரதி பத்திரம், கடவு சீட்டு போன்றவற்றை பெற விண்ணப்பிக்கும் போது பிறப்பு, இறப்பு, விவாக சான்றிதழ்களை இணைக்க வேண்டி ஏற்படுகிறது. இத்தகைய ஆவணங்களை இணைக்க வேண்டிய அவசியம் ஏற்படுவதினால், இவ் ஆவணங்கள் கைவசம் இல்லாதவர்கள், அவற்றை பெற்றுக்கொள்ள  கொழும்பு நோக்கி பெரும்பாலான மக்கள் பதிவாளர் திணைக்கள தலைமையகத்துக்கு வருகின்றனர்.

பொது மக்களுக்கு துரித சேவையை வழங்கும் வகையில் பதிவாளர் திணைக்களத்தினால் கணனி வலையமைப்பின் ஊடாக இலங்கையின் எப்பாகத்திலும் உள்ளவர்களின் பிறப்பு, இறப்பு, விவாக சான்றிதழ்களை இலங்கையில் உள்ள பெரும்பாலான பிரதேச செயலகங்களில் பெற்றுக் கொள்ள முடியும் அந்த வகையில் அம்பாறை மாவட்டத்தின் பின்வரும் அலுவலகங்களில் இச் சேவையை பெற்றுக் கொள்ள முடியும்.

01.கல்முனை காணி மாவட்ட பதிவகம்.
02.அக்கரைப்பற்று பிரதேச செயலகம்.
03.ஆலையடிவேம்பு பிரதேச செயலகம்.
04.சம்மாந்துறை பிரதேச செயலகம்.
05.பொத்துவில் பிரதேச செயலகம்.
06.அம்பாறை பிரதேச செயலகம்.
07.நாவிதன்வெளி பிரதேச செயலகம்.
08.தெஹியத்த கண்டிய பிரதேச செயலகம்.
09.தமன பிரதேச செயலகம்.
10.உகன பிரதேச செயலகம்.
11.மகா ஓயா பிரதேச செயலகம்.

மேற்குறித்த பிரதேச செயலகங்களில் விண்ணப்பித்த சான்றிதழ்களை அதே தினத்தில் அல்லது அடுத்த நாளில் இச் சேவையை பெற்றுக் கொள்ள முடியும்.

கே.சிவதர்ஷன்.
மேலதிக மாவட்ட பதிவாளர்.
( E - Population )
பதிவாளர் நாயகம் திணைக்களம்
பத்தரமுல்லை.