கணவன் மனைவியை தாக்கியதால் சிகிச்சை பலனின்றி மரணம்

(ஷமி மண்டூர்)
மட்டக்களப்பு வெல்லாவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாலமுனை மண்டூர் பிரதேசத்தில் கணவன்  தனது மனைவியை  தாக்கியதால் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த வி.பார்வதி என்பவர் நேற்று சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


சம்பவம் பற்றி மேலும் தெரியவருவது

கடந்த சில தினங்களுக்கு முன்னர் தனது மனைவியான வி.பார்வதி என்பவரை அடித்து தாக்கி படுகாயமடைந்த நிலையில் பொலிஸாரின் உதவியுடன் களுவாஞ்சிகுடி ஆதாரவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்திய சாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இவர் சிகிச்சை பலனின்றி நேற்று மரணமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.சம்பவத்துடன் தொடர்புடைய நபரை பொலிஸார் கைதுசெய்து விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார்.சம்பவம் பற்றிய விசாரணைகளை வெல்லாவெளி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.ஏ.ஏ.என்.டயஸ் தலைமையிலான குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர்.