அந்த தீபாவளி நாள் ஒருபோதும் சம்பந்தன் ஐயாவிற்கு வராது: நாமல் ராஜபக்ஸ
முல்லைத்தீவில் நடைபெற்ற பொதுஜன பெரமுனவின் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ, முன்னாள் அமைச்சர் ரெஜினோல்ட் குரே ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

இக்கூட்டத்தில் உரையாற்றிய ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தொடர்பில் பின்வருமாறு விமர்சனங்களை முன்வைத்தார்,

வேலை வாய்ப்பு, வீதி செப்பனிடல், பாடசாலை கட்டுதல், தொழிற்சாலை நிர்மாணம் போன்றவற்றைக் கேட்டால் அடுத்த தீபாவளிக்கு அரசியல் தீர்வு கிடைத்துவிடும். அதுவரை பொறுமையாக இருக்குமாறு சம்பந்தன் ஐயா கூறுவார். அந்த தீபாவளி நாள் ஒருபோதும் சம்பந்தன் ஐயாவிற்கு வராது. முதலமைச்சர் விக்னேஸ்வரன் தமிழ் மக்களுக்காக தமிழர்கள் இருக்க வேண்டும் என கூறுகின்றார். ஆனால், அவரின் பாதுகாப்பிற்கு தமிழர்கள் மீது நம்பிக்கையில்லை என கூறுகின்றார்