வாக்குச்சீட்டுக்கள் பொறுப்பேற்கும் நடவடிக்கைகள் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது


ஜனாதிபதி தேர்தல் 2019  ஆம் ஆண்டுக்கான தபால் மூல வாக்களிப்புக்கான வாக்குச்சீட்டுக்கள் அடங்கிய காப்புறுதி தபால் பொதிகள்  பொறுப்பேற்கும் நடவடிக்கைகள் இன்று மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் ,தெரிவத்தாச்சி  அலுவலகருமான எம் .உதயகுமார் , உதவி தேர்தல் ஆணையாளர் ஆர் சசீலன் ஆகியோரின் மேற்பார்வையின் கீழ் மாவட்ட அஞ்சல் அத்தியட்சகர் , சி .அருட் செல்வம் , பிரதம தபால்  அதிபர் ஆர் .சுகுமாரன் ஆகியோரின் வழிநடத்தலின் மட்டக்களப்பு பிரதம தபாலக உத்தியோகத்தர்கள் , ஊழியர்களின் ஒழுங்குபடுத்தலில் வாக்குச்சீட்டுக்கள் அடங்கிய காப்புறுதி தபால் பொதிகள் பொறுப்பேற்கும் நடவடிக்கைகள் இன்று முன்னெடுக்கப்பட்டன


இன்று ஆரமிபிக்கப்பட்ட வாக்குச்சீட்டு தபால் பொதிகள்  பொறுப்பேற்கும் நடவடிக்கைகள் எதிர் வரும் 25 ஆம் திகதி வரை  இடம்பெறவுள்ளதுடன் இதன் விசேட தபால் விநியோக  நடவடிக்கைகள்  எதிர்வரும்  நவம்பர் மாதம் 03 ஆம் திகதி முன்னெடுக்கப்படவுள்ளது.

இந்நிலையில் அனைத்து தபால் திணைக்களத்தின் பணியாளர்களுக்கான விடுமுறைகள் அனைத்தும் இரத்து செய்யப்பட்டுள்ள  நிலையில்  எதிர்வரும்  ஒக்டோபர் 31ஆம் திகதி மற்றும் நவம்பர் முதலாம் நான்காம் திகதிகளில் தபால் மூல வாக்களிப்புகள் நடைபெறவுள்ளது.