மட்டக்களப்பில் சிறைக்கைதி தப்பியோட்டம்மட்டக்களப்பு சிறையில் சிறைத்தண்டனை பெற்றுவந்த சிறைக்கைதியொருவர் தப்பியோடியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்றைய தினம் காலை மட்டக்களப்பு திருப்பெருந்துறை பகுதியிலுள்ள பண்ணையொன்றில் வேலைக்காக கைதிகளை கொண்டுசென்ற வேளையில் குறித்த கைதி அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.

சிறிய குற்றமொன்றிற்காக 3 மாதகாலம் சிறைத்தண்டனையை அனுபவித்தவந்த இவர் அக்கரைப்பற்று, ஒலுவில் பிரதேசத்தைச் சேர்ந்த 38 வயதுடைய முகமட் ஸ்மையில் என பொலிஸார் தெரிவித்தனர்