பெரியகல்லாறு மத்தியகல்லூரியில் ஆசிரியதினம்பெரியகல்லாறு மத்தியகல்லூரி மாணவர்களால் பாடசாலை மண்டபத்தில் விழாகுழு தலைவர் த.ஜெயகஜன் தலைமையில் வெகு சிறப்பாக வியாழனன்று (09) நடைபெற்றது.

பாடசாலையில் உள்ள அதிபர் பிரதி அதிபர் உட்பட 55 ஆசிரியர்கள் மாணவர்களால் மலர்மாலை அணிவித்து, பாதம் பணிந்து நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். ஆடல், பாடல்,நாடகம்,விளையாட்டு என ஆசிரியர்களும்  மாணவர்களும்; மகிழ்ச்சி வெள்ளத்தில் நீந்தினர்.

 நிகழ்வின் விசேட அம்சமாக ஓய்வுநிலை அதிபரும் முன்னாள் பாடசாலையின் ஆசிரியருமான எஸ்.கந்தசாமி ஐயா பாடசாலை அதிபர் எஸ்.பேரின்பராஜாவால் ; வரவேற்கப்பட்டு, பொன்னாடை போர்த்தியும் . விழாகுழு  தலைவரால் பாராட்டுப்பத்திரம் வழங்கியும் கௌரவிக்கப்பட்டார்.

ஆசிரியர்களினதும் மாணவர்களினதும் நல்லுறவுக்கும் புரிந்துணர்விற்கும். குருபக்திக்கும் முன் உதாரணமாக இவ்விழா இடம்பெற்றது.