தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் உறுப்புரிமை இருந்து தற்காலிகமாக ஜெயகணேஷ் நீக்கம்தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் ஏறாவூர் பற்று பிரதேச சபை உறுப்பினரான விஜயரத்தினம் ஜெயகணேஷ் என்பவர் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் ஒழுக்க விதிகளை மீறியது தொடர்பாக மக்களாலும் சக பிரதேச சபை உறுப்பினரும் கொடுக்கப்பட்ட முறைப்பாடுகளை அடுத்து கட்சியால் அமைக்கப்பட்ட ஒழுக்காற்று விசாரணை குழுவிற்கு சமுகம் கொடுக்காததன்   காரணமாக கட்சியின் ஒழுக்க விதிகளை மீறிய தொடர்பாக கட்சியின் உறுப்புரிமை இருந்து தற்காலிகமாக இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

எதிர்வரும் 7 நாட்களுக்குள் உரிய பதில்களை வழங்காத விடத்து கட்சியின் அனைத்துப் பதவிகளிலும் இருந்து நிரந்தரமாக உறுப்புரிமை இழக்க நேரிடும் என்பது தொடர்பான கடிதம் கௌரவ விஜயரத்தினம் ஜெயகணேச அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக கட்சியின் பொதுச்செயலாளர்  பூபாலபிள்ளை பிரசாந்தன் தெரிவித்தார்

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொருத்தவரைக்கும் கிழக்கு மாகாணத்தில் இருக்கின்ற மக்களுக்காக அர்ப்பணிப்புடன் சேவை செய்ய வேண்டுமே தவிர தங்களை மாத்திரம் செய்கின்ற செயற்பாடுகளுக்கு ஒருபோதும் இடம் கொடுக்கக்கூடாது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்