மஹிந்த பதவி விலகல் தொடர்பாக சபாநாயகர் அறிக்கைதேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய பதவி விலகும் தீர்மானத்தினை ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளார்.

இதனை சபாநாயகர் அலுவலகம் இன்று (வெள்ளிக்கிழமை) அறிக்கை ஒன்றினை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்ரிய தனது பதவியில் இருந்து விலகுவது தொடர்பாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கோரிக்கை ஒன்றினை முன்வைத்துள்ளார்.

மேலும், குறித்த அறிக்கையில், இந்தச் சந்தர்ப்பத்தில் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தொடர்ந்தும் பதவியில் இருப்பது சிறந்தது என தான் நம்புவதாக சபாநாயகர் கரு ஜயசூரிய குறிப்பிட்டுள்ளார்.