வானிலை அறிக்கை



மேல் மாகாணத்திலும் காலி, புத்தளம் மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது என்று வளிமண்டலவியல் திணைக்களம் இன்று காலை வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் ஏனைய பகுதிகளில் பல இடங்களில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. வடக்கு, வடமத்திய, சப்ரகமுவ, மத்திய, மேல் மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் மின்னல் தாக்கங்களினாலும் பலத்த காற்றினாலும் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றனர்.

நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு

வங்காள விரிகுடா கடற்பரப்பில் விருத்தியடைந்த புல்புல் (Bulbul) என்ற சூறாவளியானது ஒருகடும் சூறாவளியாக விருத்தியடைந்து வட அகலாங்கு 16.3 N இற்கும் கிழக்கு நெடுங்கோடு 87.9 E இற்கும் இடையில் மையம் கொண்டுள்ளது.

இது அடுத்த 24 மணித்தியாலங்களில் ஒரு மிகக் கடும் சூறாவளியாக விருத்தியடைவதுடன் வடக்கு - வடமேற்கு திசையில் பெங்கால் - பங்களாதேஷ் கரையை நோக்கி நகரக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

வட அகலாங்கு 13N – 22N இற்கும் கிழக்கு நெடுங்கோடு 83 E - 94 E இற்கும் இடைப்பட்ட கடற்பரப்புகளில் கடும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை, கடல் கொந்தளித்தல், மிகப் பலத்த காற்று போன்றவற்றிற்கான சாத்தியம் உயர்வாகக் காணப்படுகின்றது.

கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் (குறிப்பாக ஆழ்கடல் மீன்பிடிப் படகுகள்) நவம்பர் 11ஆம் திகதி வரை கடல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறும் இவ்விடயம் தொடர்பாக அவதானமாக இருக்குமாறும் வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள்.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென் மேற்கு திசையிலிருந்து வீசக்கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 20 தொடக்கம் 40 கிலோ மீற்றர் வரை காணப்படும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற்பகுதிகளில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 70 தொடக்கம் 80 கிலோ மீற்றர் வரை பலமான காற்று வீசுவதுடன் அக்கடற்பிரதேசங்கள் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும்.